எதிர் நீச்சல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை? இனி இவருக்கு பதில் இவரா?

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான எதிர்நீச்சலில் இருந்து தற்போது முக்கிய நடிகை ஒருவர் விலகி இருப்பதாக பரபரப்பான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதுதான் இன்றைய ஹாட் டாபிக் ஆகவும் இருக்கிறது. சன் டிவியில் குடும்பப் பாங்கான தொடர்கள் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. 90களில் ஆரம்பித்த இந்த வழக்கம் இன்றளவும் நீண்டு கொண்டிருக்கிறது. பல தொடர்கள் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களாக மாறிப் போயிருக்கின்றன. தற்போது திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடருக்கு இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இதில் நடிகை கனிகா, தேவதர்ஷினி, நடிகர் மாரிமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் இருந்து ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி விலகி உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

எதிர் நீச்சல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை? இனி இவருக்கு பதில் இவரா? 1

கோலங்கள் தொடரின் மூலமாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் திருச்செல்வம். இதற்கு பின்னர் திருச்செல்வத்தின் தொடர்கள் அனைத்தும் மிகப் பிரபலமானது. அல்லி ராஜ்ஜியம், மாதவி, சித்திரம் பேசுதடி, போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களை திருச்செல்வம் இயக்கியிருக்கிறார். இந்த நாடகங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. மேலும் தொடர்ந்து பல நல்ல நாடகங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார் திருச்செல்வம். அப்பா மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த தொடர் பலராலும் விமர்சிக்கப்பட்டது. பல பிற்போக்கு வசனங்களும் காட்சிகளும் இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் தற்போது பெண் புரட்சி பற்றி பேசுவதால் இந்த சீரியலுக்கு பல இல்லத்தரசிகளும் ரசிகைகளாக மாறியுள்ளனர்.


இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரமாக டிடியின் அக்கா பிரியதர்ஷினி நடித்து வந்தார். தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் பரவத் தொடங்கியது. இவருக்கு பதிலாக பானுமதி என்கிறவர் மாற்றப்பட்டிருக்கிறார். இந்த செய்தியை கேட்ட பலரும் பிரியதர்ஷினி இடம் நீங்கள் நாடகத்தை விட்டு விலக வேண்டாம் என்று இன்ஸ்டாகிராமில் கமெண்ட் களில் தங்களது கோரிக்கையை தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய நடிகை பானுமதிக்கு ஆதரவாகவும் சிலர் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் பிரியதர்ஷினி எதிர்நீச்சல் நாடகத்திலிருந்து விலகவில்லை. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்கிற நாடகத்தில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த நாடகத்திலிருந்து தான் விலகி இருக்கிறார். ஆனால் சிலரோ அவர் எதிர்நீச்சல் இருந்து விலகி விட்டதாக வதந்தியை கிளப்பி இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்