எனக்கு வயது 30 ஆகி விட்டது அதனால் டிவியில் இருந்து விலகி சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என்று இருக்கிறேன் என்று பிரியங்கா பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்றால் அது பிரியங்கா தான். 13 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் இன்று வரை விஜய் டிவியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கொண்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மக்கள் மத்தியில் செல்வாக்கான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் மற்றும் இந்த சீசனில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே என்னும் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை அதில் பதிவேற்றி வருகிறார். தற்போது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். கடந்த மாதம் அவரின் 30வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜய் டிவியின் பல பிரபலங்கள் இவரின் பிறந்த நாளில் கலந்து கொண்டு வாழ்த்தினர். Youtube Video Code Embed Credits: Priyanga Deshpande
அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பாலாவிடம் பேசும்போது, தனக்கு 30 வயதாகிவிட்டது அதனால் டிவியில் இருந்து விலகி சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் பாலா அவருக்கு சமாதானம் சொல்கிறார். மைக் பிடித்த எல்லாரும் ஆங்கர் ஆகிவிட முடியாது என்றும் நீ நினைத்தாலும் மைக் உன்னை விடாது என்றும் சமாதானம் கூறினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video