விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது தனது youtube பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அமீர் மற்றும் பாவனியுடன் இணைந்து அவர் துபாய்க்கு சென்றிருக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். விஜய் டிவியில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளனியாக வேலை பார்த்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தனது எதார்த்தமான பேச்சாலும், உடல் மொழியாலும், தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் காரணத்தினாலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவரும் ம.கா.பா ஆனந்தும் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக துபாய் சென்று இருக்கிறார் பிரியங்கா. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் பிரியங்கா. அவருடன் சேர்ந்து பிக் பாஸ் பிரபலங்களான அமீர் பாவனி ஆகியோரும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மூவரும் துபாய்க்கு சென்று இருக்கிறார்கள். அவருடன் அமீரும் பாவனியும் சென்றுள்ளனர். அங்கு செல்லும் அவர் கண்ணாடி பாலத்தில் நடக்கும் பொழுது காமெடியான பல விஷயங்களை செய்திருக்கிறார். கண்ணாடி பாலத்தில் நடக்கும் பொழுது அமீர் பிரியங்காவின் கையைப் பிடித்து சுற்றும் பொழுது அவருக்கு மயக்கமே வந்துவிட்டது. இதுபோல் பல காமெடியான விஷயங்களை இந்த வீடியோவில் பிரியங்கா செய்து இருக்கிறார்.
மேலும் தனது கல்லூரி கால தோழி ஒருவரையும் துபாயில் வைத்து சந்தித்து இருக்கிறார். அவர்களுடன் சேர்ந்து உணவகம் ஒன்றில் உணவருந்தி விட்டு அவர்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு இருக்கிறார் பிரியங்கா. காமெடியாக இருக்கும் வீடியோவை அவர் youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்தால் பொழுது போவதே தெரியவில்லை. செம காமெடியாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Priyanga Deshpande