விஜே பிரியங்கா, அறிமுகமான சிறுது காலங்களிலேயே விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினியாக மாறி போனார்.விரைவில் மக்களிடம் நன்மதிப்பை பெற்று சிறப்பான ஒரு தொகுப்பாளராக திகழுந்து வருகிறார். எந்த முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு இவர் தான் தொகுப்பாளர். முக்கிய நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என அந்த தொலைக்காட்சியின் மிக முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் இவரே தொகுப்பாளர்.

அண்மையில் தன்னுடைய 30ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. சக தொகுப்பாளரான மா.கா.பாவுடனான இவருடைய கெமிஸ்ட்ரி மிக ரசிக்கும் படி இருக்கும். நிறைய விருதுகளும் இவர் தன்னுடைய தொகுப்பாளினி திறமைக்காக வாங்கியுள்ளார். மிகவும் பாராட்டப்படும் மா.கா.பா மற்றும் ப்ரியங்காவின் நிகழ்ச்சி தொகுப்பே பல ரசிகர்களையும் அந்த நிகழ்ச்சிகளை பார்க்கவைக்கிறது.
வெற்றிகரமாக மீடியா துறையில் திகழ்ந்து வரும் இவர், சாதாரணமாக அலப்பறை இன்றி, பிரவீன் என்பவரை திருமண செய்து கொண்டார். சில படங்களில் ஆர்ட் டைரக்ராக பணியாற்றுள்ள இவர், விஜய் டிவியின் ஆஸ்தான ஆர்ட் டைரக்டராக இருந்து வருகிறார். பிரியங்கா எப்போதும் இன்ஸ்டாகிராம், நிகழ்ச்சிகள் என ரசிகர்களிடம் பரிட்சயப்பட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவருடைய கணவர் பிரவீன் அது போன்று இல்லாமல் மீடியா கண்ணில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார்.
தொகுப்பாளினி மட்டுமின்றி ப்ரியங்கா விஜய் டிவியின் பிரபல ஒளிபரப்பு நிகழ்வான கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ் 5” கலந்து கொண்டு 2ஆவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மூலம் ரசிகர்களிடம் இன்னும் கொஞ்சம் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் வாங்கி குவித்தார். இப்பொது அந்த நிகழ்ச்சியில் முடிந்தது முதல் மீண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
அவ்வப்போது இன்ஸ்டா லைவ், விடியோக்களை, போட்டோக்கள், இன்டேவியூக்கள் என எப்போதும் மக்களுக்கு பரீட்சைய பட்டுக்கொண்டே இருக்கும் இவர் சமீபகாலமாக கணவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் பல தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக தன்னுடைய 30வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடிய இவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எதிலும் இவருடைய கணவர் பிரவீன் காணப்படவில்லை. இதனால் இந்த பேச்சு சூடு பிடிக்க துவங்கியது.
இது குறித்து பேசியபோதும், பிரியங்கா எந்த வித பதிலும் கூறாமல், மழுப்பி பதிலளித்து பல்வேறு நிகழ்வுகளிலிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய இன்ஸ்டா பதிவில் ரசிகர் ஒருவர், ” பிரவீன் அண்ணா பற்றி கூறுங்கள் எனவும், மற்றொரு ரசிகர், ” இதில் பிரவீன் அண்ணா எங்க அக்கா” என கேள்வி கேட்டு உள்ளனர். இது அனைத்தும் பிரியங்கா தன்னுடைய பிறந்தநாள் வீடியோ கீழ் வந்த கமெண்டுகள். இதற்கும் ப்ரியங்கா பதிலளிக்கவில்லை.
இப்பொது சமீபத்திய தனியார் பேட்டி ஒன்றில், “திருமண முடிந்த பிறகும் நீங்கள் எப்படி எல்ல விஷயங்களையும் சாதாரணமாக எடுத்து கொள்கிறீர்கள்” என கேட்டதற்கு, “உங்களுடைய கணவர் அனைத்தையும் புரிந்துகொண்டால் மட்டுமே போதும் எந்த வித பிரச்சனையும் இருக்காது என பதில் அளித்துள்ளர். அவர் கூறியதிலிருந்து இருவரும் ஒன்றாக இருக்கிறார்களா? இல்லை உண்மையாகவே புரளி போல பிரிந்த்து விட்டார்களா? என தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.