முடிவுக்கு வருகிறது காற்றுக்கென்ன வேலி சீரியல்.! உறுதி செய்த ஹீரோயின் ப்ரியங்கா குமார்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதை தற்போது அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா குமார் ஒரு பதிவு ஒன்றை போட்டு உறுதி செய்து இருக்கிறார். விஜய் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கு என்ன வேலி சீரியல். இந்த சீரியலில் சுவாமிநாதன் சூர்யா என்கிற கதாபாத்திரத்திலும், பிரியங்கா குமார் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் சூர்யாவின் கல்லூரியில் படிக்கும் வெண்ணிலா மீது சூர்யாவுக்கு காதல் வருகிறது. இருவரும் பல தடைகளை மீறி திருமணம் செய்து கொள்கின்றனர்.

முடிவுக்கு வருகிறது காற்றுக்கென்ன வேலி சீரியல்.! உறுதி செய்த ஹீரோயின் ப்ரியங்கா குமார்.! 1

இந்த திருமணத்தில் நடக்கும் தடங்கல்கள் என்ன?தடைகளை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனரா? என்கிற விறுவிறுப்புடன் கதை நகர்ந்து வருகிறது. பல நாட்களாக இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக இணையத்தில் தகவல்கள் உலா வந்து கொண்டே இருந்தது. தற்போது இந்த சீரியல் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இருப்பதால் விரைவில் முடிவடைய இருப்பதாக தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் இந்த நாடகத்தின் ஹீரோயினான பிரியங்கா.


அதில் அவர், “இன்னும் சில நாட்கள் மட்டுமே சென்னையில் இருக்கப் போகிறேன், இந்த நகரம் நான் கேட்டதை விட எனக்கு நிறைய கொடுத்து விட்டது, நான் இப்போதைக்கு எமோஷனலாக போவதில்லை, நான் சுற்றிப் பார்ப்பதற்கு எனக்கு நல்ல இடங்களை பரிந்துரையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவின் மூலமாக இந்த சீரியல் முடிவுக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. சில மாதங்களாகவே காற்றுக்கென்ன வேலி சீரியல் முடிவட இருப்பதாக இணையத்தில் தகவல் கசிந்து கொண்டே இருந்தது. ஆனால் சூர்யா வெண்ணிலா திருமணத்தின் மூலம் மீண்டும் மதியம் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங்கைப் பிடித்து முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்