Priyanka – Manimegalai விவகாரம்..! தரமான பதிலடி கொடுத்த Venkatesh Bhat..!

வெளியிட்டது

மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த தொலைக்காட்சியையும் எதிர்த்த மணிமேகலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவருமே ப்ரியங்காவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக ரசிகர்களிடம் அமைந்து இருக்கிறது.

Priyanka - Manimegalai விவகாரம்..! தரமான பதிலடி கொடுத்த Venkatesh Bhat..! 1

தற்போது இருவரின் சண்டை குறித்தும் , இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நடுவராக இருந்த செப் வெங்கடேஷ் பட் கருத்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி பேசிய அவர், இது அவ்வளவு பெரிய சண்டை இல்லை என்றும், இதனை அவர்களே தீர்த்து கொள்வார்கள் என கூறியுள்ளார். மேலும் இதை பற்றி என்னவென்றே தெரியாமல் பேசி வரும் பலரையும் செருப்பால் அடிக்க வேண்டும் என ஆவேசமாக கூறி உள்ளார் வெங்கடேஷ் பட்.

மேலும் பெண்களை பற்றி எதுவுமே தெரியாமல் யாரும் பேச கூடாது எனவும், தனது வீட்டில் இரண்டு பெண்கள் சண்டையிட்டால் எப்படி இருக்குமோ அதுபோல தான் இருக்கிறது. மணிமேகலையின் கருத்துக்கு ப்ரியங்காவே பதில் சொல்ல வேண்டும் வேறு யாரும் இடையில் செப் வெங்கடேஷ் பட் தெளிவாக விளக்கி கூறி உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்