சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ரோஜா’ சீரியலில் நடித்த நடிகை பிரியங்கா நல்காரி தனது கணவருடன் இணைந்து புது தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியின் தொடராக இருந்த ‘ரோஜா’ தொடரில் கதாநாயகி சின்னத்திரையில் பிரபலமானவர் பிரியங்கா.
பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சீதாராமன்’ தொடரில் கமிட்டாகி நடித்து வந்தார். சில காரணங்களால் அந்த சீரியல் இருந்து விலகி இருந்தார்.
தற்போது ‘நளதமயந்தி’ என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு அவரது காதலருடன் திருமணம் நடைபெற்றது. மலேசியாவில் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது தனது கணவருடன் இணைந்து மலேசியாவில் புது ரெஸ்டாரண்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்காக அவர் பூஜை போட்டிருக்கிறார்.
அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.