Categories: சினிமா

அமரன் படத்திற்கு எதிராக போராட்டம்..! படத்தை தடை செய்ய வலியுறுத்தல்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊதியமே இவர் சினிமாவில் ஜொலிப்பது எனலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கான கூட்டத்தை சினிமாவில் உருவாக்கி உள்ளார்.

அமரன் படத்திற்கு எதிராக போராட்டம்..! படத்தை தடை செய்ய வலியுறுத்தல்..! 1

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகி இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் படத்திற்கு நல்ல விமர்சனமும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து உள்ளது.

தற்போது இப்படத்திற்கு எதிராக SDPI கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் படத்தையும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்