Categories: அரசியல்

விடுமுறை என்றாலும், போராட்டம் தொடரும்: சென்னை பல்கலைக்கழகம்

போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழகம் விடுமுறையை அறிவித்திருந்தாலும், போராட்டம் தொடருமென சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும், குடியுரிமை சட்ட திருத்ததை எதிர்த்தும் சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருக்கிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் வரும் 23ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தாலும், உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுமென சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் நுழைந்துள்ளனர். ஆனாலும் சலைக்காத மாணவர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகிறார்கள்.

விடுமுறை என்றாலும், போராட்டம் தொடரும்: சென்னை பல்கலைக்கழகம் 1
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.
விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்