Categories: அரசியல்

144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் நடைபெறுகிறது!

டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏராளமான மக்கள் வீதியில் திரண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் நடைபெறுகிறது! 1
பெங்களூரு போராட்டம்

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சென்றடைந்தது. மாணவர்கள் நடத்திய பேரணி காவல்துறையின் தடியடியில் முடிவடையவே, போராட்டம் தீவிரமடைந்து நாட்டின் எல்லா மூளைக்கும் பரவியது. தமிழகத்தில் திமுக போராட்டத்தை தொடங்கி இருக்கிறது.

இந்த போராட்டம் பெங்களூர் நகருக்கும் பரவியது. மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இப்போராட்டத்தை தடுக்கும் நோக்கில் கர்நாடகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதே யுக்தியை டெல்லி மாநகர காவல்துறையும் பின்பற்றி போராட்டம் நடைபெறுவதை தடுத்துவிடலாம் என எண்ணியது.

ஆனால் விவகாரம் அதன் பின்னரே பெரிதாகியது. டெல்லி செங்கோட்டை பகுதியிலும், பெங்களூர் டவுன் கால் பகுதியிலும் முன்பை விட ஏராளமானோர் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்