எனக்கு நீ மகனா வந்து பிறக்கணும் மாமா.. வடிவேல் பாலாஜி பற்றி உருக்கமாக பதிவிட்ட புகழ்

வெளியிட்டது

விஜய் டிவியின் பிரபலமாக வலம் வருபவர் புகழ். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ஆறு வருட காதலியான பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வடிவேலு பாலாஜி பற்றி உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். எனக்கு மகனாக வடிவேலு பாலாஜி பிறக்க வேண்டும் என்று புகழ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கடலூரை சேர்ந்தவர் புகழ். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அங்கு அவருக்கு ஏதுவும் வேலை கிடைக்காததால், கிடைத்த வேலையை செய்து கொண்டு இருந்துள்ளார். அவருக்கு முடி வெட்ட கூட காசு இல்லாத காரணத்தால், அப்படியே பரட்டை ஆகிப் போனதாக புகழே பல இடங்களில் கூறி இருக்கிறார். அப்படி இருந்த புகழுக்கு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் வடிவேல் பாலாஜி.

எனக்கு நீ மகனா வந்து பிறக்கணும் மாமா.. வடிவேல் பாலாஜி பற்றி உருக்கமாக பதிவிட்ட புகழ் 1

ஆரம்பத்தில் புகழுக்கு பெண்கள் வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால் பல இடங்களில் அவமானங்களை சந்தித்துள்ளார் புகழ். இருந்தபோதிலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். வடிவேலு பாலாஜி தன்னிடம் பலமுறை அவர் நடிக்க வேண்டிய இடங்களில் என்னை நடிக்க வைத்து, என்னை முன்னேற்றினார் என்றும் அவர் பல இடங்களில் கூறியிருக்கிறார். இப்படி பிரபலமானதால் தான் புகழுக்கு குக் வித் கோமாளியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் புகழுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜீத், சூர்யா என முண்ணனி நடிகர்களுடன் நடித்து முடித்துள்ளார். ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடத்து முடித்துள்ளார். இவருக்கு இவ்வளவு பெயரும் புகழும் கிடைக்க காரணமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி.

சில வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக வடிவேல் பாலாஜி காலமானார். ஆனாலும் புகழ் அவரை மறக்காமல் இருந்து வருகிறார். வடிவேல் பாலாஜியின் திருமண நாள் அன்று திருமணம் செய்து கொண்டுள்ளார் புகழ். மேலும் வீட்டில் பாலாஜியின் புகைப்படத்தை மாட்டியள்ள அவர், பென்சியுடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த புகழ், இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா, உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன். எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்