Categories: சினிமா

வருங்கால மனைவியுடன் செம்ம cute ஆக ரீல்ஸ் செய்த புகழ்.! பென்சியும் நல்லா நடிக்கிறாங்களே

வெளியிட்டது

திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு பலரும் கிளம்பி வருவதுண்டு. அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் புகழ். இவர் ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது எங்கேயும் வாய்ப்பு கிடைக்காததால் மெக்கானிக் ஷாப்களில் வேலை பார்த்து வந்தார். முடிவெட்ட கூட காசு இல்லை என்பதால் தலையை அப்படியே விட்டதால், அவரின் முடிகள் பரட்டையாக மாறின. இதுவே அவரின் அடையாளமாகி போனது பரட்டை புகழ் என்றால் தற்போது தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார் புகழ். கடலூரைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிகளில் பெண் வேடங்களில் நடித்து வந்தார். அப்போது இவர் பல அவமானங்களை சந்தித்துள்ளார். எங்கு சென்றாலும் பெண் வேடங்களில் நடிப்பவர் தானே நீ என்று இவரை பலரும் கேலி செய்துள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வருங்கால மனைவியுடன் செம்ம cute ஆக ரீல்ஸ் செய்த புகழ்.! பென்சியும் நல்லா நடிக்கிறாங்களே 1

ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத புகழ், தன்னுடைய உழைப்பால் இன்று முன்னேறி இருக்கிறார். இவருக்கு குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது நிலையை மேலும் உயர்த்திக்கொண்டார். இவரின் உடல் மொழி மற்றும் நேரம் பார்த்து அடிக்கும் காமெடிகள், இவரின் முக பாவனைகள் எல்லாமே சிரிப்பை வரவழைக்கும். குழந்தைகளுக்கு இவரை மிகவும் பிடித்து போனதே இந்த நிகழ்ச்சியின் மூலம் தான். தற்போது இவர் வெள்ளித்திரையில் கமிட்டாகி பல படங்களின் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 16 1947 என்ற படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார். இவரை ஹீரோவாக வைத்து ஜூ கீப்பர் என்ற ஒரு படமும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இவர் ஆறு வருடங்களாக பென்சி என்ற ஒருவரை காதலித்து வருகிறார். அவருக்கும் பென்சிக்கும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடக்க உள்ளது. அந்த திருமண பத்திரிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே அவர் திருமணத்திற்கு முன்பான போட்டோ சூட் நடத்தினார். அப்போது இடைவேளையில் ஒரு ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். பார்க்கவே காமெடியாக இருக்கும் அந்த ரீல்ஸை நீங்களும் காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்