Categories: சினிமா

எதிரிகளை பந்தாடும் புஷ்பா.! அதிரடியாக வெளியானது ‘புஷ்பா 2’ டீசர்.! வீடியோ உள்ளே

வெளியிட்டது

‘புஷ்பா 2’ படத்தின் டீசர் தற்போது அதிரடியாக வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பகத் பாசிலுக்கு இந்த படம் முதல் தெலுங்கு படமாகும். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதிரிகளை பந்தாடும் புஷ்பா.! அதிரடியாக வெளியானது 'புஷ்பா 2' டீசர்.! வீடியோ உள்ளே 1
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்திய படமாக மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஆந்திர பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் சேஷாசலம் மலைப்பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தை படக்குழு எடுத்து முடித்து இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான மினி டீசரில், ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய புஷ்பா திருப்பதி சேஷாசலம் பகுதியில் கிடைத்து இருப்பதாக காட்டப்பட்டதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது புது டீசர் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Mythri Movie Makers

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்