பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின் நேராக சென்று ராபர்ட் மாஸ்டரை சந்தித்த குயின்சி.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் புகைப்படத்தை தற்போது குயின்சி வெளியிட்டு இருக்கிறார். அவர் பிக்பாஸில் இருந்து மற்றொரு நபரான ராபர்ட் மாஸ்டரை சென்று சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்களை தற்போது தனது instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 57 நாட்களை கடந்து இருக்கிறது. 21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மொத்தம் எட்டு பேர் வெளியேறிவிட தற்போது 13 போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று கமலஹாசன் அறிவித்திருக்கும் நிலையில், 11 பேருடன் மீதமுள்ள நாட்கள் பிக்பாஸ் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வெளியேறிய குயின்சி நேராக சென்று ராபர்ட் மாஸ்டரை சந்தித்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின் நேராக சென்று ராபர்ட் மாஸ்டரை சந்தித்த குயின்சி.! 1

ராபர்ட் மாஸ்டருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தையை அவரது மனைவி இரண்டு வயதாக இருக்கும் போதே பிரித்து அழைத்துச் சென்று விட்டார். பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது அந்த குழந்தை ராபர்ட் மாஸ்டரை அங்கிள் என அழைத்ததாக பிக்பாஸில் இருக்கும் போது கூறி கதறி அழுதார். இதனால் மகள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு, பிக்பாஸ் வீட்டில் ஒரு மகளாக கிடைத்தவர் தான் குயின்சி.

குயின்சியும் ராபர்ட் மாஸ்டரை அப்பா என்று தான் அழைப்பார். இவர்கள் இருவருக்கும் இருந்த இந்த பிணைப்பு பார்ப்பதற்கே நன்றாக இருந்தது. உண்மையிலேயே அப்பா மகள் போல் இருவரும் நடந்து கொண்டனர். ராபர்ட் மாஸ்டர் மகள் ஏக்கத்தை குயின்சி போக்கினார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குயின்சியை தனது மகளாக தத்து எடுத்துக் கொண்டதாக ராபர்ட் மாஸ்டர் தெரிவித்தார்.


வெளியே வந்த பின்பு தனது மகள் குயின்சிக்கு வாக்களிக்கும் படி ராபர்ட் மாஸ்டர் பேட்டிகளில் கோரிக்கை விடுத்து வந்தார். மேலும் தொடர்ந்து, தான் தொடங்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்சி பெயரை வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து முதலில் ராபர்ட் வெளியேறிவிட, அவரை தொடர்ந்து இரண்டாவது ஆக குயின்சியும் வெளியேறி விட்டார். வெளியே வந்த பிறகு நேராக சென்று ராபர்ட் மாஸ்டரை குயின்சி சென்று சந்தித்திருக்கிறார் அவரை கேக் வெட்டி ராபர்ட் வரவேற்று இருக்குறார். அந்த புகைப்படங்களை தற்போது instagram பக்கத்தில் குயின்சி வெளியிட்டு இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்