குயின்சி பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதன்முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார். அவர் அந்த வீடியோவில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடல் அழகியான குயின்சி நடிப்பின் மீது இருக்கு ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார். இவர் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் சிக்ஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் ஒரு முக்கிய போட்டியாளராக இருந்து வந்தார் குயின்சி. இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் இவர் பெயர் அடிபட்டது. இவர்தான் வெளியே போவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அதன்படியே இவரும் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்பு அவர் முதன் முறையாக தற்போது லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இவருக்கும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் நிவாஷினிக்கு இடையே நல்ல நட்பு இருந்தது. நிவாஷினி வெளியே சென்ற பிறகு ராபர்ட் மாஸ்டரும் இவருக்கும் நல்ல நட்பு இருந்தது. ராபர்ட் மாஸ்டர் குயின்சியை தனது மகளாக ஏற்றுக் கொண்டார். மேலும் வெளியே வந்த பின்பு முதல்முறையாக சென்று ராபர்ட் மாஸ்டரை தான் சந்தித்திருந்தார் குயின்சி. அவருக்காக கேக் வெட்டி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ராபர்ட் மாஸ்டரும் சர்ப்ரைஸ் செய்தார். இந்த நிலையில் இன்று விஜய் தொலைக்காட்சியின் மூலமாக லைவ்க்கு வந்த குயின்சி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவரும் கண்டிப்பாக பைனல்ஸ்க்கு போவார்கள் என்று அவர் பேசினார். மேலும் அசீம் கோபத்தை குறைத்துக் கொண்டு நேர்மையாக விளையாட்டினால் அவரும் நல்ல பிளேயர் தான் என்று கூறினார்.
மேலும், ராபர்ட் மாஸ்டர் உண்மையிலேயே ஒரு குழந்தை மாதிரி. அவர் அப்பாவாக எனக்கு கிடைத்ததற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நிவாஷினிக்கும் எனக்கும் இருந்த நட்பு பிரிக்க முடியாதது, அது போல் எதிர்பாராமல் எனக்கு கிடைத்த ஒரு சொந்தம் ராபர்ட் மாஸ்டர். அதேபோல் எதிர்பாராமல் எனக்கு கிடைத்த இன்னொரு நட்பு என்றால் அது ஷிவின் தான். ஷிவின் உண்மையிலேயே முதல் ஐந்து இடத்தில் வருவார். ஷிவின் ஜெயித்தால் நாம் உண்மையிலேயே மிகவும் சந்தோஷப்படுவேன். அவர்தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று குயின்சி பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7