Categories: சினிமா

ஆஸ்கர் வரை சென்ற ராயன்..! படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பிற்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சிறிதாக சினிமாவில் இவர் தொடங்கிய பயணம் இன்று ஹாலிவுட் சினிமா வரை உயர்ந்து இருக்கிறது. பல முன்னணி நடிகர்கள் கூட எட்டாத இடத்தை நடிகர் தனுஷ் எட்டி இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை வழங்கி இருக்கிறது.

ஆஸ்கர் வரை சென்ற ராயன்..! படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்...! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 1

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷ் ராயன் படத்தை இயக்கி நடித்து உள்ளார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருந்தது. கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இது தனுஷின் 50வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் படத்தின் மேல் வைத்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பினை இப்படம் பூர்த்தி செய்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

நடிகர் தனுஷ் எழுதி இயக்கிய ராயன் படத்தின் திரைக்கதையானது ஆஸ்கர் விருதினை வழங்கும் அகாடமி நிறுவனமான, அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில், புத்தகமாக வைக்க தேர்வாகி உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் படக்குழுவினர் மட்டுமில்லாது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்