தினேஷ் பற்றி விசித்ரா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹவுஸ்மேட்ஸ்.! வரவேற்ற ரட்சிதா மஹாலக்ஷ்மி.!

வெளியிட்டது

பிக்பாஸில் தீவிரமாக விளையாடி வரும் தினேஷுக்கு எதிராக தொடர்ந்து ரட்சிதா கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் தற்போது இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை போட்டு தினேஷிற்கு தனது எதிர்ப்பை தெளிவாக காட்டி இருக்கிறார். மேலும் அவர் விசித்ரா கூறிய அனைத்தையும் ஆமோதிக்கும் விதமாக “நான் ஒத்துக் கொள்கிறேன்” என்கிற வார்த்தையை பலமுறை உபயோகித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை எட்டி இருக்கிறது. இதில் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரட்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ் தற்போது சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

தினேஷ் பற்றி விசித்ரா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹவுஸ்மேட்ஸ்.! வரவேற்ற ரட்சிதா மஹாலக்ஷ்மி.! 1
இந்த நிகழ்ச்சியில் தினேஷிற்க்கும் விசித்ராவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. விசித்ராவும் எதற்கெடுத்தாலும் தினேஷ் பெயரை பயன்படுத்தி வருகிறார். தினேஷும் எதைக் கூறினாலும் விசித்ரா பெயரை பயன்படுத்துவதுமாக இருந்து வருகிறார். தனிப்பட்ட முறையில் தன்னை தினேஷ் மிகவும் தாக்குவதாக விசித்ரா கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் போட்டியாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருடைய விளையாட்டுத் திட்டத்தை பற்றி தொகுத்து கூற வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது விசித்ரா வழக்கம் போல தினேஷ் பற்றி பல விஷயங்களை கூறினார்.


விசித்ரா கூறியது சரி என்றால் மற்ற போட்டியாளர்கள் ஒத்துக்கொள்கிறேன் என அட்டையை தூக்கி காட்ட வேண்டும், இல்லை என்றால் ஒத்துக்கொள்ளவில்லை என்ற அட்டையை தூக்கிக் காட்ட வேண்டும். தினேஷ் பற்றி விசித்ரா கூறியதை கேட்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் “நாங்கள் இதை ஒத்துக் கொள்ளவில்லை” என்று சொல்லி அட்டையை தூக்கி காட்டி இருந்தனர். இந்த நிலையில் விசித்ராவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக தற்போது ரட்சிதா மகாலட்சுமி புதிய பதிவொன்றை போட்டு இருக்கிறார். அதில் “நான் ஒத்துக் கொள்கிறேன், நான் உண்மையாகவே ஒத்துக் கொள்கிறேன், நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று ஒத்துக் கொள்கிறேன், நான் ஒத்துக் கொள்கிறேன்” என்று வணக்கம் வைக்கும் எமோஜிகளையும் பகிர்ந்திருக்கிறார்.


நேற்று விசித்ரா கூறியதை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் Disagree செய்து “ஒத்துக் கொள்ளவில்லை” என்று கூறிய நிலையில் அதை “அனைத்தையும் ஒத்துக் கொள்கிறேன்” என்ற ரீதியில் ரட்சிதா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்