ரட்சிதாவிற்கு ஆதரவாகவும் மைனாவிற்கு எதிராகவும் ரட்சிதாவின் கணவர் பதிவிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூருவை சேர்ந்தவர் ரட்சிதா மஹாலெட்சுமி. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக அவர் சென்னைக்கு வந்தார். முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் அவர் சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் சீசன் 2 மற்றும் மூன்றுகளில் நடித்தார். இதனால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது. இதன் பின்னர் தினேஷை திருமணம் செய்து கொண்ட அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இதில் சரவணன் மீனாட்சி சீசன் 2வில் ரட்சிதாவுடன் நடித்த புகழ் பெற்றவர் தான் மைனா. மைனாவும் ரட்சிதாவும் தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். தற்போது மைனா குறித்து ரட்சிதா கணவர் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரட்சிதாவும் மைனாவும் நண்பர்களாக இருந்த நிலையில், சமீபத்தில் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது. நேற்றைய எபிசோடில் கூட லைவில் மைனா அது குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனது திருமணத்திற்கு நான் ரட்சிதாவை கூப்பிடவில்லை, அதனால் அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்தி இருந்தார் என்றெல்லாம் மைனா மணியிடம் பேசிக் கொண்டிருந்தார். மேலும் ஷூட்டிங் போது தான் இந்த உடை உடுத்த கூடாது, அந்த உடை உடுத்தக்கூடாது என்றெல்லாம் ரட்சிதா தன்னை கட்டாயப்படுத்தினார் என்றும் மணியிடம் பேசினார். இது ஒரு புறம் இருக்க கடந்த வாரம் நடந்த ஏலியன் டாஸ்கில் சேரில் அமர வைத்து எல்லை மீறிய கேள்விகளை மைனா, ரட்சிதாவிடம் கேட்கத் தொடங்கினார்.
தன் மனதில் இருக்கும் தனிப்பட்ட கேள்விகளை அவர் டாஸ்க் வழியாக கேட்டார். இதை பார்த்த ரட்சிதாவின் கணவர் கடுப்பாகி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் உங்களுடைய சகப் போட்டியாளர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உங்களுடைய நெருங்கிய நண்பர் என்றும் சொல்லிக் கொள்கிறார். ஆனால் நீங்கள் அந்த சேரில் அமர்ந்திருந்த போது மோசமான கேள்விகளால் உங்களை தூண்டினார். ஆனால் நீங்கள் அந்த இடத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தீர்கள். நீங்கள் சேரில் அமர்ந்து இருக்கும் பொழுது நடந்து கொண்ட விதம் வேறு லெவலில் இருந்தது. இது போன்ற தனிப்பட்ட தாக்குதலை நீங்கள் ஒரு நெருப்பு வளையம் போட்டு அழகாக எதிர் கொண்டீர்கள். பலரின் மனதை வென்று வாருங்கள், ஐ ஸ்டாண்ட் ஃபார் ரட்சிதா, வோட் ஃபார் ரட்சிதா என்ற ஹேஸ் டேக்குகளையும் அவர் பகிர்ந்து இருந்தார்.
ரட்சிதாவிடம்ராபர்ட் மாஸ்டர் காதல் விளையாட்டுகளை அரங்கேற்றிய போது மைனா தான் ராபர்ட் மாஸ்டரை தூண்டிவிடுகிறார், மைனா வெளியேற வேண்டும் என்று ரட்சிதாவின் கணவர் பதிவிட்டு இருந்தார். பிறகு ரட்சிதாவை பார்த்து எருமை மாட்டுக்கு சேலை கட்டி விட்டது போல இருக்கு என்று சொன்ன ஜனனியையும் அவர் வெளியேற வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். தற்போது மீண்டும் மைனாவை மறைமுகமாக தாக்கி அவர் இந்த பதிவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த போதிலும் தனது மனைவிக்காக தொடர்ந்து தினேஷ் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
View Comments
ஜனனியை குறை சொல்லகூடாது என தினேசிடம் தெரிவிக்கவேண்டும்