பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் வீடியோவை ரட்சிதா மகாலட்சுமி பகிர்ந்திருக்கிறார். அதில் அவரை அவரது நண்பர்கள் வரவேற்று கேக் வெட்டியும் பட்டாசு வெடித்து கொண்டாடியும் வரவேற்று இருக்கின்றனர். அந்த அழகான வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் ரட்சிதா. பிக்பாஸ் செல்வதற்கு முன்பு ரட்சிதா விஜய் டிவியில் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் நாடகங்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய போது அதன் டிஆர்பி ரேட்டிங் ஏறுவதற்கு ரட்சிதா பல வகைகளில் உதவி செய்திருக்கிறார். அந்த காரணத்தினால் தான் என்னவோ அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் 90 நாட்களுக்கு அவர் பிக்பாஸ் வீட்டில் வெற்றிகரமாக விளையாடி வந்தார். பெங்களூருவை சேர்ந்த ரட்சிதா மகாலட்சுமி 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம் என்கிற நாடகத்தின் மூலமாக முதல்முறையாக தமிழ் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் சரவணன் மீனாட்சி பாகம் 2, சரவணன் மீனாட்சி பாகம் 3, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல தொடர்களில் நடித்தார். ஆனால் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லி விஜய் டிவியிலிருந்து விலகி, கலர்ஸ் தமிழுக்குச் சென்றார். அங்கு ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த நாடகம் பாதியிலேயே முடிக்கப்பட்டது. அதனால் மீண்டும் விஜய் டிவி பக்கமே திரும்பினார் ரட்சிதா. இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினாலும், தனது கணவருடன் சரியான வாழ்க்கை செல்லாத காரணத்திலும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வதற்காக அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பம் முதலே அமைதியான போட்டியாளராகவும் யாருடனும் சண்டை வம்பு போடாமலும் இருந்து வந்தார். கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அவரை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து வரவேற்று இருக்கின்றனர். மேலும் அவருக்காக கவிதை ஒன்றையும் எழுதி அந்த வீடியோவை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அதில் அவள் யாரையும் காயப்படுத்தவில்லை, ஆனால் நிறைய காயப்பட்டாள், அவள் யாரையும் கேலி செய்யவில்லை, ஆனால் நிறைய கேலி செய்யப்பட்டாள், அவள் யார் தகுதியையும் குறைத்துப் பேசவில்லை, ஆனால் அவள் தகுதியற்றவள் என்று கூறப்பட்டாள், அவள் அன்பை மட்டுமே அனைவருக்கும் அளித்தாள், கண்ணீரை மட்டுமே சுமந்து செல்கிறாள். அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை என்று ரட்சிதாவின் அழகிய வீடியோவை ரட்சிதாவே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O