சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து ரசிகர்கள் பலரின் மனங்களில் இடம் பிடித்தவர் ரட்சிதா மகாலட்சுமி. தற்போது இவர் விரைவில் புதிய நாடகம் ஒன்றில் நடிக்க இருக்கும் தகவலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் ஒரு நபர்களில் ஒருவராக இருக்கிறார் ரட்சிதா மகாலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி கலர்ஸ் தொலைக்காட்சிக்கு சென்ற அவர் மீண்டும் பிக் பாஸ் மூலமாக விஜய் தொலைக்காட்சிக்கு திரும்பி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா வெல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். வெளியே வந்த பின்னர் எந்த நாடகத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த ரட்சிதா தற்போது புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ரட்சிதா மகாலட்சுமி நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து நடிக்கத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது சரவணன் மீனாட்சி தான் அதன் பின்னர் ஜீ தமிழில் நாச்சியார்புரம் என்கிற சீரியலிலும் தனது கணவருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி விலகி கலர்ஸ் தமிழுக்குச் சென்ற அவர் இது சொல்ல மறந்த கதை என்கிற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த நாடகம் திடீரென முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பிக் பாஸில் கலந்து கொண்ட அவர் தற்போது எந்த நாடகத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் புதிய நாடகம் ஒன்றில் கமிட்டாக இருக்கும் செய்தியை ரட்சிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். போலீஸ் உடையில் இருப்பது போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கம்மிங் சூன் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அவர் எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. முழு நேரமாக நடிக்கப் போகிறாரா அல்லது ஏதும் கெஸ்ட் ரோலா என்பதும் தெரியவில்லை. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது ரட்சிதா வெளியிட்ட அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!