தினேஷுக்கு எதிராக களம் இறங்கிய ரட்சிதா மஹாலட்சுமி.! இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவு.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விளையாடி வரும் நடிகர் தினேஷின் மனைவி ரட்சிதா அவருக்கு எதிராக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். மறைமுகமாக தனது கணவரை விமர்சித்து அவர் போட்டிருக்கும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் தினேஷ். இவர் பிரபல சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமியின் கணவர் ஆவார். ரட்சிதாவிற்கும் அவரது கணவருக்கும் பல நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

தினேஷுக்கு எதிராக களம் இறங்கிய ரட்சிதா மஹாலட்சுமி.! இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவு.! 1

இந்த நிலையில் ரட்சிதாவிற்கு சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதே சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக தினேஷ் உள்ளே வர பல முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவரால் அந்த சீசனில் உள்ளே வர முடியவில்லை. இதை அவரே சமீபத்தில் எபிசோடு ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்த சீசனில் ஐந்து வைல்டு காடு என்ட்ரிகளில் ஒரு போட்டியாளராக உள்ளே வந்தார் தினேஷ் உள்ளே வந்தது முதல் நன்றாக விளையாடி வந்த அவர், சமீப காலமாக விசித்ராவிடம் அதிக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

எப்பொழுதும் விசித்ராவை தாக்கி பேசுவது, அவரிடம் சண்டை போடுவது என்று தினேஷின் போக்கு விசித்திராவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விசித்ராவிற்கு ஆதரவாக ரட்சிதா பதிவிட்டுள்ள பதிவு, அவர் இனி தினேஷுடன் சேரவே போவதில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விசித்ராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரட்சிதா மகாலட்சுமி, “உண்மையான போராளி என்று ரட்சிதாவின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.


மேலும் ‘ஸ்டாரங் லேடி’ என்று சொல்லி அவரை கட்டி அணைப்பது போன்ற எமோஜிகளையும், அவருக்கு வணக்கம் செலுத்துவது போன்ற எமோஜிகளையும் பகிர்ந்து இருக்கிறார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தினேஷ் தொடர்ந்து விசித்ராவிடம் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் தான் இப்படி ரட்சிதா பதிவிட்டு இருக்கிறார். தினேஷுக்கு எதிராகவும், விசித்ராவிற்கு ஆதரவாகவும் ரட்சிதா இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்