விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ரட்சிதா மகாலட்சுமி தற்போது குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பேசி இருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது வரை 65 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களாக இருந்த இவர்கள் தற்போது 11 போட்டியாளர்களாக குறைந்து இருக்கின்றனர். மொத்தம் பத்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இந்த சீசனில் மிகப் பரிச்சயமாக இருக்கும் ஒரு நபர் என்றால் அது ரட்சிதா மகாலட்சுமி தான். பெங்களூருவை சேர்ந்த ரட்சிதா மஹாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து மிகப் பிரபலமானவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இவருக்கும் சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லாத காரணத்தினால் தான் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தினேஷ் இந்த பிரிவு குறித்து பேசும் போது, இது தற்காலிகமானது தான், காலம் எங்களை மீண்டும் இணைக்கும் என்று பேசியிருந்தார். மேலும் சட்டபூர்வமாக பிரிவதற்கு நாங்கள் எந்த முயற்சியையும் இந்த நிமிடம் வரை எடுக்கவில்லை என்றும் பேசி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா கலந்து கொண்ட போது அவருக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வருகிறார். ரட்சிதாவை தாழ்த்தும் விதமாக யாராவது பேசினால் அவர்களுக்கு குறைவான வாக்களித்து வெளியேற்றும் படி ரட்சிதாவின் ரசிகர்களை அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டு பதிவுகளை போட்டு வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரட்சிதா ஒரு முறை தனது திருமண வாழ்க்கை குறித்து பேசும் பொழுது நம்மை சிறு வயதிலிருந்து வளர்த்த பெற்றோர்களை வளர்ந்த பின்பு அல்லது திருமணம் ஆன பின்பு விட்டு விட முடியுமா? நாம் சம்பாதித்து நம் பெற்றோர்களுக்கு கொடுக்கும் போது, அதை யாராவது தட்டிக் கேட்டால் அதை கேட்க நீ யாருடா என்று கேட்க தோணும் என்று கணவரை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் விக்ரமனிடம் ஒரு குழந்தையை தத்தெடுப்பது குறித்து பேசி இருக்கிறார் ரட்சிதா. அதில் தான் தன்னுடைய 35 வது வயதில் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன். 35 வயது என்ற அளவுகோலை வைத்ததற்கு காரணம் நிறைய கற்றுக் கொண்ட அனுபவம் கிடைக்கும். அதன் மூலம் ஒரு குழந்தையை என்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும் என்று பேசினார். விக்ரமன் ஆணா பெண்ணா என்று கேட்க, பெண் குழந்தை தான் .எனக்கு பெண் குழந்தை தான் மிகவும் பிடிக்கும் என்று பேசி இருக்கிறார் ரட்சிதா.
ரட்சிதாவின் இந்த பேச்சின் மூலம் அவர் தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பது போல தான் தெரிகிறது. ஆனால் ரட்சிதாவும் தினேஷும் விரைவில் மனக்கசப்புகள் நீங்கி சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் அவர்களது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.