தனது கணவர் குறித்தும், குடும்பம் குறித்தும், ரட்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி. பெங்களுருவை சேர்ந்த இவர், தினேஷை திருமணம் செய்து கொண்ட பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார். பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கிய அவர், சரவணன் மீனாட்சி தொடரில், மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நாடகம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் சீசன் 3 ஆகியவற்றில் மீனாட்சியாக நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று சீரியலை விட்டு விலகினார்.

பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, காரணமே இல்லாமல் அந்த நாடகத்தை முடித்தனர். இதனால் கோபமடைந்த ரட்சிதா மகாலட்சுமி அந்த சேனலை கடுமையாக திட்டி இருந்தார். பின்னர் மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பிய அவர் பிக்பாஸில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சமீப காலமாகவே ரட்சிதாவிற்கும் அவரது கணவர் தினேஷ்க்கும் சண்டை இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஒருமுறை பேட்டியின் போது பேசிய ரட்சிதாவின் கணவர் தினேஷ், எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாகவும், காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் என்றும் பேசி இருந்தார். மேலும் தனக்கு வேலை இல்லாமல் இருப்பது ரட்சிதாவிற்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் பேசியிருந்தார்.
ஆனால் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது இறுதி வரை தெரியவில்லை. இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்டுள்ள ரட்சிதா தனது கணவர் குறித்தும் திருமணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு பணம் கொடுத்து யார் உதவி செய்வார்கள்? நாம் தானே செய்ய வேண்டும், ஆனால் திருமணம் முடிந்த பிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை. திருமணம் முடிந்த பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கும். நான் சம்பாதிக்கிறேன் நான் ஏன் என்னுடைய தாய் தந்தைக்கு கொடுக்கக் கூடாது, அதை கேட்பதற்கு நீ யார் என்றெல்லாம் கேட்கத் தோணும், அது போன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது நான் அந்த போன்ற நிலைமைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன் என்று பேசினார்.
அந்த வீடியோக்களை ரட்சிதாவின் ரசிகர்கள் பகிர்ந்து பண பிரச்சனை தான் இவர்கள் இருவரும் பிரிவுக்கும் காரணம் என்று வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.