ரட்சிதாவை விரட்டி விரட்டி காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர்.! Cute ஆக இருப்பதாக மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் கதை தொடங்கி உள்ளது. ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை சைட் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 9ம் தேதி தொடங்கி சீசன் 6 நடைபெற்று வருகிறது. 21 நாட்களை கடந்து விட்ட பிறகு நட்பு சண்டை காதல் என பல கன்டென்ட் கிடைக்கும் இடமாக இருக்கிறது பிக்பாஸ். இதில் அசல் – நிவா, குயின்சி – அசீம், மகேஸ்வரி – ராம் என இளசுகள் காதல் செய்வது போல் காட்டப்பட்டு வருகிறது. அதில் 41 வயதாகும் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை சைட் அடிப்பதும் ரட்சிதாவை சைட் அடிப்பது போலவும், அவருடன் காதலில் விழுந்தது போலவும் காட்டப்படுகிறது. இதை நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ரட்சிதாவை விரட்டி விரட்டி காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர்.! Cute ஆக இருப்பதாக மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்.! 1

ரட்சிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். பெங்களூருவை சேர்ந்த அவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருக்கு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. தற்போது ரட்சிதாவும் அவரது கணவர் தினேஷும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதை அவரது கணவர் தினேஷே ஒரு பேட்டியில் உறுதி படுத்தியுள்ளார். இந்த நிலையில் ரட்சிதாவுக்கு பிக்பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

எந்த சண்டையிலும் சிக்காமல் மிகவும் நேர்மையாக விளையாடி வருகிறார். இரண்டு வாரங்களாக நாமினேஷனில் இருந்த அவர் அதிக வாக்குகளை பெற்று முதல் ஆளாக காப்பாற்ற பட்டு வருகிறார். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் வந்த நாள் முதலே ரட்சிதாவை மூக்குத்தி என்று அழைத்து வருகிறார். மேலும் வெளியில் இருந்த போது நாடகத்தை பார்க்கும் போது ரட்சிதா மீது Crush இருந்ததாகவும் கூறினார். நாட்கள் செல்ல செல்ல ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை சைட் அடிக்கும் காட்சிகளை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்