நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனாக இருப்பினும் இவர் முதல் முறை 1976ஆம் ஆண்டு கன்னட படம் ஒன்றின் மூலமே திரையுலகில் அறிமுகமானார். இவரை நடிகர் கமல்ஹாசன் பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்து வைக்க 1979ஆம் ஆண்டு வெளியான “மன்மத லீலை” படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்ப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் ராமாநாராயணன் படங்களில் நடித்து புகழ் பெற்று வந்த அவரை, டி.ராஜேந்தர் உயிருள்ள வரை உஷா படத்தில் வில்லனாக்கி மிக முக்கிய மாற்றத்தை கொடுத்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து மிக பெரிய அளவில் நன்மதிப்பை பெற்றார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்தார் என்பதை விட மிக முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கினார்.
தமிழ் சினிமாவின் மிக பெரிய குணச்சித்திர நடிகராக மாறிய இவர் 2000ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள கட்சிகளில் மாறி மாறி இருந்துள்ளார். 2000ஆம் ஆண்டு தி.மு.கவில் இருந்த இவர் பின்னர் விலகி 2002ஆம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் அங்கிருந்த இவர் பின் 2017ஆம் ஆண்டு தி.மு.கவிற்கு மாறினார். இ.பி.எஸ்ஸை சந்தித்தன் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர் பின் மீண்டும் அ.தி.மு.கவில் சேர்த்து சில மாதங்களிலேயே வெளியேறி 2019ஆம் ஆண்டு நவம்பரில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை வாங்கியுள்ள இவர் எப்போதும் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசி பிரச்னையில் மாட்டிக்கொள்வர். நயன்தாரா பற்றி பேசியதன் காரணமாகவே இவர் 2019ஆம் ஆண்டு தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இப்பொது மீண்டும் அது போல ஒரு கருத்தை கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் லீட் ரோலில் நடித்திருக்கும் நாயகி காவ்யா, நடிகர் ராதாவி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ராதாரவி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தற்காக நன்றி தெரிவித்தார். நல்ல கதை மற்றும் கேரக்டர் என தெரிந்ததால் நடித்ததாக கூறிய அவர், கனல் படம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “நான் ஒரு முறை நடிகை தமன்னாவை ஏர்போர்ட்டில் சந்தித்தேன். அப்போது என்னடா இது இவளோ வெள்ளைய இருகாங்க..எங்கயாவது கொஞ்சூண்டு கருப்பு இருங்கதனு பார்த்தேன் ஆனா கொஞ்சம் கூட கருப்பே இல்ல…அதே போல நாயகி காவ்யாவும்” என கூறினர். இவர் இயல்பாக நடிகையை பாராட்ட இப்படி கூறினாலும் இது இப்பொது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Video Courtesy – CommonMan