பாக்கியலெட்சுமி சீரியலில் கதாநாயகி மற்றும் வில்லியாக நடித்து வரும் பாக்கியாவும், ராதிகாவும் இணைந்து சேலையில் ஆட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலெட்சுமி. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. இதில் அவருடைய கணவரின் இரண்டாவது மனைவியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் ஆரம்பத்தில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி வந்தார் நடிகை ரேஷ்மா. பின்னர் அவருக்கு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் ராதிகா கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் சீரியலை விட்டு விலகிய பின்பு ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்தார். ஆரம்பத்தில் இவரை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பழைய ராதிகாவை கொண்டு வாருங்கள் என்று சீரியல் குழுவினருக்கு பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் தற்போது இவரை முழுமையாக பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் பாக்யாவின் தோழியாக வந்த இவர் தற்போது பாக்யாவிற்கு சக்காளத்தியாக மாறி இருக்கிறார். நாடகத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் பாக்கியாவும், ராதிகாவும் தற்போது இணைந்து நடனமாடி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா, பாக்கியா, வேலைக்காரப் பெண்ணாக நடித்து வரும் செல்வி ஆகிய மூவரும் இணைந்து குத்தாட்டம் போட்டு வருகின்றனர். சாண்டி மற்றும் ஜி.பி.முத்து இருவரும் இணைந்து வெளிவந்துள்ள வலைய எடுத்து வீசு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7