Categories: சினிமா

மீனா பிறந்தநாளுக்கு ஹோட்டலுக்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் செய்த ராதிகா..

வெளியிட்டது

கணவர் மறைவால் சில காலமாக தனிமையில் இருந்து வந்த மீனா, தற்போது தனது பிறந்த நாளை முன்னிட்டு வெளியில் வர தொடங்கி இருக்கிறார். அவரது தோழிகள் அவரை தேற்றி வருவதை பார்க்கவே சந்தோஷமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை மீனா தனது 46வது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். அமைதியாகப் போய்க் கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் புயல் அடித்தது போல் அவரது கணவரின் இறப்பு இருந்தது. ஜூன் மாதம் அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் செயலிழப்பால் மரணம் அடைந்தார்.

மீனா பிறந்தநாளுக்கு ஹோட்டலுக்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் செய்த ராதிகா.. 1

அப்போது தொடங்கி இன்று வரை நடிகைகள் சங்கீதா, சங்கவி, கலா மாஸ்டர் ரம்பா, ஸ்ரீதேவி, சினேகா என மீனாவுக்கு தோளோடு தோள் நின்று வருகின்றனர் இவர்களின் நட்பை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மீனாவிற்கு கலா மாஸ்டர் சர்ப்ரைசாக வந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியிருந்தது. பிறகு அவ்வப்போது மீனாவின் வீட்டிற்கு சென்ற தோழிகள் நைனிகா மற்றும் மீனாவிற்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக மீனாவிற்கு 46வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சினேகாவின் அக்கா கீதா உட்பட பலரும் மீனாவை அழைத்துச் சென்று கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் மீனாவின் தோழிகள் அனைவரும் மீனாவை உணவகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். தனது தோழிக்காக வந்து தோளோடு தோள் நிற்கும் நட்புகள் கிடைக்கும் வரம் வேண்டுமென்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் மீனாவை உணவகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவருக்கு விருந்து வைத்துள்ளார். இதை மீனாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உங்களுடைய நேரத்திற்கு நன்றி ராதிகா என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு கீழே உங்கள் இருவரின் நட்பை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்