விஜய் டிவியில் ராதிகாவின் புது சீரியல்..! பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்.! இதோ வீடியோ..!

வெளியிட்டது

விஜய் டிவியில் ராதிகா சரத்குமார் இயக்க இருக்கும் புது நாடகத்தின் பூஜை தற்போது நடந்திருக்கிறது. பூஜையுடன் இந்த நாடகத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் இந்த நாடகத்தின் ப்ரோமோ வெளியாக இருப்பதாகவும், சீரியல் விலைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தனது ராடான் மீடியா நெட்வொர்க்ஸ நிறுவனத்தின் மூலமாக பல சீரியல்களை தயாரித்து இல்லத்தரசிகளின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். சித்தி, வாணி ராணி, அண்ணாமலை, செல்வி, அரசி போன்ற பல நாடகங்களை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் தங்க வேட்டை, கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சிகளையும் அவர் தயாரித்திருக்கிறார். இதில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சரத்குமாருடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ராதிகாவின் புது சீரியல்..! பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்.! இதோ வீடியோ..! 1

ராதிகா தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். நடிகர் விஜய், தனுஷ் போன்றவர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளாக எந்த நாடகத்தையும் தயாரிக்காமல் இருந்து வந்த அவர் தற்போது சன் டிவியில் இருந்து விலகி இருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் “கிழக்கு வாசல்” என்கிற புது சீரியல் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். இந்த சீரியலில் ராதிகாவுடன் இணைந்து சஞ்சீவ், விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், சின்னத்திரை நடிகை ரேஷ்மா போன்றவர்கள் நடிக்க இருக்கின்றனர். தற்போது இந்த நாடகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கி இருக்கிறது. விரைவில் இந்த நாடகத்தின் முதல் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் சில நாடகங்கள் முடிவுக்கு வர இருப்பதால் தொடர்ந்து அடுத்தடுத்த நாடகங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றது.


தற்போது பொன்னி, ஆஹா கல்யாணம், மகாநதி போன்ற சில புது நாடகங்கள் ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில் விக்ரம் வேதா என்கிற அடுத்த சீரியல் ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது் இந்த நிலையில் அடுத்து ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 போன்ற சில நாடகங்கள் வருகிற ஜூன் மாதத்திற்குள் நிறைவடைய இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை. ஆனால் விஜய் டிவி அடுத்தடுத்த நாடகங்களை ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறது. தற்போது கிழக்கு வாசல் நாடகத்திற்காக படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. அந்த பூஜை வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. ராதிகாவின் நாடகங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. எனவே இந்த சீரியல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். நீங்களும் பூஜை வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்