சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ராதிகா சரத்குமார்.! முழு விவரம் இதோ.!

வெளியிட்டது

நடிகை ராதிகா சரத்குமார் தற்போது விஜய் டிவியில் ஒரு புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் கிடைத்துள்ளது. தமிழ் உலகின் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா சரத்குமார். பிரபல நடிகராக இருந்த எம் ஆர் ராதாவின் மகளான இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த இவர் கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக 1978 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார். 1985 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை என்கிற படத்தின் இயக்கியதன் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். பின்னர் அவர் ராடான் மீடியா ஒர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை 1999 ஆம் ஆண்டு நடத்தி வந்தார். இதன் மூலமாக பல சின்னத்திரை சீரியல்களை அவர் தயாரித்திருக்கிறார். இந்த நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்கிற நிகழ்ச்சியில் போது தான் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் சரத்குமார் உடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ராதிகா சரத்குமார்.! முழு விவரம் இதோ.! 1
நடிப்பது, படங்கள் தயாரிப்பது, படங்களை இயக்குவது, பின்னணி பேசுவது, சின்னத்திரையில் நடிப்பது, அரசியல்வாதி என்று பன்முக திறமையாளராக வலம் வருகிறார் நடிகை ராதிகா சரத்குமார். இவர் முதல் முறையாக 1999 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் சித்தி என்கிற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, வாணி ராணி சீசன் 2, சந்திரகுமாரி, திருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்தார். இதில் பல சீரியல்களை தன்னுடைய ரேடான் மீடியா ஒர்க்ஸ் மூலமாகவே தயாரித்தார். இது மட்டுமில்லாமல் தங்கவேட்டை, கோடீஸ்வரி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் அவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் சின்னத்திரை பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். தற்போது கொலை, கோஸ்ட்டி, சந்திரமுகி 2 ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் சில சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கிறது. குறிப்பாக மௌன ராகம் சீசன் 2, காற்றுக்கு என்ன வேலி போன்ற சீரியல்கள் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் ராதிகா சரத்குமார் நடிக்க இருக்கும் புதிய சீரியல் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராதிகா தயாரிப்பில் உருவாகும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜயின் தந்தை பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதுவும் விஜய் டிவியில் ராதிகாவின் என்ட்ரிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தகவலால் தற்போது ராதிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.இந்த சீரியலின் பெயர் கிழக்கு வாசல் என்றும், சம்சாரம் அது மின்சாரம் கதையை சற்று மாற்றி அமைக்கப்பட்டு அந்த கதை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்