இயக்குனர் பாரதிராஜாவை நடிகை ராதிகா இன்று நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு, அவரது உடல் நலம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். கிராமத்து மண் வாசனைகளை தனது திரைப்படங்களின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் சென்ற பெருமை கொண்டவர் இயக்குனர் பாரதிராஜா. என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்று அவர் படம் தொடங்கும் முன்பு பேசும் வார்த்தைக்காகவே பலபேர் அவரது படங்களை பார்த்தனர். இயக்குனர் இமயம் என்று போற்றப்படுகிறார். இன்று தமிழில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த பலரையும் அறிமுகம் செய்து வைத்த பெருமை அவருக்கு தான் உண்டு. அவர் தற்போது உடல் நலம் குன்றி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இயக்குவதை விட்டுவிட்டு பல படங்களில் நடிகராக நடித்த தொடங்கி இருந்தார் பாரதிராஜா. சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 81 வயதாகும் அவர் மதுரைக்கு விமான மூலம் சென்றார். அங்கு விமான நிலையத்திலேயே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரே நாளில் சென்னைக்கு திரும்பினார். சென்னையில் தனது நீலாங்கரை இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு மீண்டும் உடல் நலம் குன்றி போகவே, அவரை சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல் நிலையில் சிறிதும் முன்னேற்றம் இல்லாததால், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றி இருந்தனர். அங்கு ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.
பாரதிராஜாவை அவரது நண்பர்களான இளையராஜா, வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ராதிகாவை அறிமுகப்படுத்திய அந்த இயக்குனரை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரிக்க ராதிகா சென்றிருந்தார். பின்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரார்த்தனைகளுக்கு சக்தியும் நல்ல வைப்ரேஷனும் இருக்கின்றன, இன்று பாரதிராஜாவை நேரில் சந்தித்தேன். அவர் உடல்நலம் தேறி வருகிறார். அவர் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க என்னால் முடியவில்லை. அவரை இந்த நிலைமையில் என்னால் பார்க்க முடியவில்லை.! அவரின் உடல் தேறி வர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவருக்கும் எம் ஜி எம் மருத்துவமனைக்கும் மிக்க நன்றி என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். Twitter Original Source from: Radikaa Sarathkumar