தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவருடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து அவரது மனைவி ராதிகா சரத்குமார் உருக்கமாக வாழ்த்தியிருக்கிறார். டிடி, சுஜா வருணி, மீனா, உமாரியாஸ் போன்ற பல நடிகர் நடிகைகளும் சரத்குமாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், முன்னாள் நடிகர் சங்கத் தலைவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சரத்குமார். 1990களில் தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர் தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவரும் அசோக் செல்வனும் இணைந்து நடித்த “போர்த் தொழில்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்பாக பெரிய பழுவேட்டரையராக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பந்த்ரா என்கிற மலையாள படத்திலும், கிரிமினல் மற்றும் நிறங்கள் மூன்று என்ற படங்களிலும் நடிதது வருகிறார். இந்த நிலையில் சரத்குமாருக்கு தற்போது 68 வயது நிறைவடைந்து இருக்கிறது. அவரின் பிறந்தநாளுக்கு ராதிகா சரத்குமார், மகள் வரலட்சுமி, மகன் ராகுல் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் ஆகி மண முறிவு ஏற்பட்டது. இந்த தம்பதிகளுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சரத்குமாரும் நக்மாவும் காதலித்து வருவதாக கூறி இந்த மண முறிவு ஏற்பட்டதாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
அதன்பின்னர் சரத்குமார் 2001 ஆம் ஆண்டு ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதன் உரிமையாளராக இருந்த ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராதிகா – சரத்குமார் தம்பதிகளுக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார். மேலும் 1996 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த இவர் 2006 ஆம் ஆண்டு அதிமுகவுடன் இணைந்தார் அதன் பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை 2007 ஆம் ஆண்டு தொடங்கினார் இந்த கட்சியின் பொதுச் செயலாளராக அவரது மனைவி ராதிகா சரத்குமாரை நியமித்தார். அவ்வபோது தனது குடும்பத்துடனும் மகன் மற்றும் மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களை சரத்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் 69 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவரது மனைவி ராதிகா சரத் குமாருடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு உருக்கமான வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில், “சிங்கம் போன்ற இதயம் கொண்ட சரத்குமாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்_ உங்களது விடாமுயற்சி வலிமை பெற வேண்டும், அந்த வலிமையிலிருந்து மென்மேலும் வலிமையாக நீங்கள் வளர வேண்டும். என்னுடைய இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து இந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று சொல்லி சில புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
மேலும் சரத்குமாருக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, சுஜா வருணி, நடிகைகள் மீனா, உமாரியாஸ், உமா நாயர், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், மகன் ராகுல், ராதிகாவின் மகள் ரேயான் போன்ற பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!