நடிகை ராதிகா சரத்குமாரும் ஸ்ரீபிரியாவும் இணைந்து சிங்கப்பூரில் இருந்து ஒரு வீடியோ ஒன்றை தற்போது ஷேர் செய்து இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகின் தொண்ணூறுகளில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் நடிகை ராதிகா மற்றும் ஸ்ரீபிரியா. இவர்கள் இருவரும் நடிகர்கள் என்பதை தாண்டி நல்ல நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வந்த நிலையில், தற்போதும் அவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா சரத்குமார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று இந்தியா மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பது, சின்னத்திரையில் நடிப்பது, சின்னத்திரை நாடகங்களை தயாரிப்பது, இயக்குவது என்று பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ராடன் மீடியா நெட்வொர்க் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ராதிகா, அந்த நிறுவனத்தின் மூலமாக கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தயாரித்த போது அந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சரத்குமாருக்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ரீபிரியாவுடன் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
சிங்கப்பூருக்கு சென்ற அவர்கள் இருவரும் ஷாப்பிங் செய்வது தியேட்டருக்கு செல்வது, மேலும் தனது கணவர் சரத்குமார் நடித்த போர்த் தொழில் படத்திற்கு செல்வது என்று ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் .மேலும் எனக்கும் ஸ்ரீபிரியாவிற்கும் சிறு வயதில் இருந்தே ஒரு பந்தம் இருக்கிறது, நாங்கள் ஒன்றாக இருக்கும் பொழுது மக்களை பயமுறுத்துகிறோம், அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம், ஷாப்பிங் செய்வது, வித்தியாசமான பானங்களை அருந்துவது, கடைகளில் சுட்டித்தனங்கள் நிறைந்த குழந்தைகளை போல விளையாடுவது வாழ்க்கை பற்றி பேசுவது, சமைப்பது உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி செய்வது பற்றி பேசுவது என்று இந்த தருணங்கள் எப்போதும் நீர்த்துப் போவதில்லை.
எனது வாழ்க்கையின் மற்றொரு அழகான தருணம் இது என்று அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O