ஹீரோவாக அறிமுகமாகிறார் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின்! அதிலும் இந்த பிரபல நடிகர் கூட நடிக்கிறாராம்.

வெளியிட்டது

டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி தற்போது நடிப்பு, தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பல பரினாமங்களில் கலக்கி கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட அவர் தம்பி எல்வினை தனது சூப்பர் டூப்பர் ஹிட்டான காஞ்சனா−2ல் முதல் பாடலில் அறிமுகம் செய்தார். லாரன்ஸை போலவே எல்வினும் அந்த பாடலில் தனது அண்ணணுக்கு ஈடு கொடுத்து கலக்கலாக ஆடினார்.

ஹீரோவாக அறிமுகமாகிறார் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின்! அதிலும் இந்த பிரபல நடிகர் கூட நடிக்கிறாராம். 1

2015ல் வெளியான காஞ்சனா−2 அறிமுகம் ஆனதிலிருந்தே எல்வின் எப்போது கதாநாயகனாக அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வருடம் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தம்பி எல்வினை கதாநாயகனாக தான் இயக்கும் படத்தில் அறிமுகப்படுத்தபோவதாக வெளியிட்டார். பின்பு கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது, ராட்சசன் படத்தின் தயாரிப்பாளரான ஜி.டில்லிபாபு அவர்களின் “ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரி” தயாரிப்பில் எல்வின் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவல் எல்வின் அவர்களின் பிறந்த நாளான இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை பற்றிய மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான ராஜ்கிரண் நடிக்கவுள்ளார். மேலும் மற்றுமொரு முன்னனி நடிகர் ஒருவரும் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. லாரன்ஸ் போல இவரும் பல வெற்றி படங்களைத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்