பிரம்மாண்டமாக வெளியாகியது ராகவா லாரன்ஸ் படத்தின் போஸ்டர்..! பான் இந்தியா படமாக உருவாகும் லாரன்ஸ்25..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக நடித்து இன்று இயக்குனராக உருவெடுத்து உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியாகிய காஞ்சனா படத்தின் நான்கு பாகங்களும் மாபெரும் ஹிட் அடித்து உள்ளது. தொடர்ந்து பல இயக்குனர்களுடன் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

பிரம்மாண்டமாக வெளியாகியது ராகவா லாரன்ஸ் படத்தின் போஸ்டர்..! பான் இந்தியா படமாக உருவாகும் லாரன்ஸ்25..! 1

நடிப்பு மட்டுமில்லாமல் தொடர்ந்து ஏழை மாணவர்களை படிக்க வைத்தும், பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார். உதவிகளை செய்வதற்காகவே மாற்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். தற்போது இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர் தனது 25வது படத்திற்காக பிரபல தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா உடன் கைகோர்த்து உள்ளார்.

இப்படத்திற்கு கால பைரவா என படக்குழு பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு உள்ளது.மேலும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. ரசிகர்கள் ராகவா லாரன்சுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்