Categories: சினிமா

ரகுவரனுக்கு எனக்கும் நிறைய பிரச்சனை இருந்தது… ஆனால்.! ரகுவரன் குறித்து மனம் திறந்து பேசிய முன்னாள் மனைவி ரோகினி.!

வெளியிட்டது

ரகுவரனை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும், தன்னுடைய மகன் ரிஷி ரூபத்தில் ரகுவரனை தான் காண்பதாகவும் நடிகை ரோகினி தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ரகுவரன். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான காக்கா என்கிற மலையாள திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் என்கிற படத்தின் மூலமாக தமிழில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் குறிப்பிடத்தக்க படங்களாக பாட்ஷா, முதல்வன், சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்கள் இருக்கின்றன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரகுவரனுக்கு எனக்கும் நிறைய பிரச்சனை இருந்தது... ஆனால்.! ரகுவரன் குறித்து மனம் திறந்து பேசிய முன்னாள் மனைவி ரோகினி.! 1
இவருக்கும் நடிகை ரோகினிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ரோகிணி பிரிந்து ரகுவரனை பிரிந்து சென்றார். 2004 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக 2008 ஆம் ஆண்டு சென்னையில் வைத்து காலமானார் நடிகர் ரகுவரன் காலமானார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ரிஷி பார்ப்பதற்கு அப்படியே ரகுவரன் போலவே இருக்கிறார். இந்த நிலையில் ரகுவரன் பற்றி பல தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரோகினி. அதில் நாயகன் திரைப்படத்தில் நாசர் கதாபாத்திரத்தில் ரகுவரன் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அவர் வேறு ஒரு படத்திற்காக நீளமாக முடி வைத்திருந்ததால் அந்த படத்தின் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாகவும் பேசினார்.


மேலும் அவருக்கு கமல் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை கிடைக்கவில்லை, தனக்கு ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசிய அவர் தற்போது ரகுவரனை மிகவும் மிஸ் செய்வதாகவும், அவருடைய ரூபத்தில் தான் தனது மகன் ரிஷியை பார்ப்பதாகவும் அவன் பேசுவது யோசிப்பது என அனைத்தும் ரகுவரன் போலவே இருப்பதாகவும் ரோகினி ஒரு பேட்டியில் கண் கலங்க கூறியிருக்கிறார். அந்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Aagayam Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்