Categories: சமூகம்

காஷ்மீரில் ஆகஸ்டு 5 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் ரெயில் சேவை தொடக்கம்! மக்கள் மகிழ்ச்சி!

வெளியிட்டது
காஷ்மீரில் ஆகஸ்டு 5 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் ரெயில் சேவை தொடக்கம்! மக்கள் மகிழ்ச்சி! 1

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ந்தேதி மத்திய அரசு ரத்து செய்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மும்மரமாக தீவிரப்படுத்தப்பட்டது.

முன்னாள் முதல் மந்திரிகள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து வன்முறை பரவி வருவதை தடுக்க இன்டர்நெட் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. காஷ்மீரில் ஆகஸ்டு 5ந்தேதி முதல் ரெயில் சேவையும் தற்காலிக ரத்து செய்யப்பட்டு இருந்தது.வீட்டு காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையேயான ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை (நேற்று) என 2 நாட்கள் ஸ்ரீநகர் மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையே ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர். ரெயில் சேவை இன்று தொடங்கிய நிலையில், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்