விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. மூன்று சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு நகைச்சுவை சமையல் போட்டி நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் நகைச்சுவை நடிகர்கள் குக்குகளுடன் இணைந்து சமைப்பார்கள். அது குக்குகளுக்கு உதவியாக இல்லாமல் கோமாளித்தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. சமையலுக்கு நடுவில் கோமாளிகள் செய்யும் சுட்டித்தனங்களும் நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகளும் இணைந்து எப்படி குக்குகள் சிறப்பாக சமைக்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு காரணம். முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராகவும், இரண்டாவது சீசனில் கனி வெற்றியாளராகவும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிஹா வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நான்காவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் வழக்கம்போல் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்கின்றனர். ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சுனிதா, மணிமேகலை, புகழ், குரேஷி ஆகிய நான்கு பழைய கோமாளிகள் இருந்த நிலையில், தற்போது மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற புதிய கோமாளிகள் பலரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். மணிமேகலை விலகி விட்டதால் அவருக்கு பதிலாக பழைய ஜோக் தங்கதுரை கோமாளியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 குக்குளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கிஷோர் வெளியேறிவிட தற்போது ஒன்பது குக்குகள் சமைத்து வருகின்றனர் அதில் நடிகை சிருஷ்டி, சிவாங்கி, ஷெரின், ராஜ் ஐயப்பன், எழில், விசித்ரா, விஜே விஷால், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், மைம் கோபி போன்றவர்கள் குக்குகளாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் கிஷோர் மற்றும் காளையன் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 8 வாரங்களை கடந்துவிட்ட நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஷெரின் மற்றும் ராஜ் ஐயப்பா இருவரும் கடைசி இடத்தில் இருந்தனர். இருவருக்கும் Face Off குக்கிங் வைக்கப்பட்டு இருந்தது. இருவருக்கும் மாம்பழம் மற்றும் மாங்காயை வைத்து ஏதாவது ஒரு டிஷ் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இருவரும் நன்றாக உணவு சமைத்து இருந்த போதிலும் 0.1 வித்தியாசத்தில் ராஜ் ஐயப்பா எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். வெளியேறிய போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தான் யாரிடமும் அவ்வளாகவாக பேச மாட்டேன், ஆனால் என்னை பேச வைப்பதற்காக இங்கு இருக்கும் கோமாளிகள் குக்குகள் என அனைவரும் அவ்வளவு முயற்சி செய்தார்கள். மேலும் இது போல ஒரு லெஜெண்ட்கள் நடுவராக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நான் பாக்கியமாக நினைக்கிறன் என்று சொல்லி கண்ணீர் மல்க விடைபெற்றுக்கொண்டார் ராஜ் ஐயப்பா. விரைவில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்து அசத்துங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.