இனிமே இவங்க தான் புது சந்தியா.! சந்தியாவை அறிமுகப்படுத்தி ப்ரோமோவை வெளியிட்டது ராஜா ராணி டீம் .!

வெளியிட்டது

ராஜா ராணி தொடரிலிருந்து சந்தியாக கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா விஸ்வநாதன் விலகியதையடுத்து புது சந்தியாவாக யார் நடிக்க இருக்கிறார் என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது புது சந்தியாவுடன் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் ஒரு பெண், இனிப்புக் கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது மனைவி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற ஆசையை தெரிந்து கொள்கிறார். அதற்கு மாமியார் முட்டுக்கட்டையாக இருக்கிறார் இந்த தடைகள் அனைத்தையும் மீறி மனைவியை ஐபிஎஸ் ஆக்கினாரா? சந்தியா ஐபிஎஸ் ஆனாரா? அதற்கு அவரது மாமியார் ஒத்துக்கொண்டாரா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி. தற்போது பல தடைகளை மீறி ஐபிஎஸ் ட்ரைனிங் அனைத்தையும் முடித்து சந்தியா சொந்த ஊருக்கே போஸ்டிங் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.

இனிமே இவங்க தான் புது சந்தியா.! சந்தியாவை அறிமுகப்படுத்தி ப்ரோமோவை வெளியிட்டது ராஜா ராணி டீம் .! 1
இந்த நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சீரியலில் இருந்து விலகுவதாக சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. ழ நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்திருந்தார் ரியா விஸ்வநாதன்.இது வதந்தி என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ரியாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விலகல் குறித்து காரணம் எதுவும் கூறாமல் இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவும் அன்பும் கொடுத்து வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்றும், நான் சந்தியாவாக தனது 200 சதவீத உழைப்பை கொடுத்தேன், இப்பொழுது புது சந்தியா நடித்து வருகிறார். நீங்கள் அந்த புது சந்தியாவிற்கு உங்களது ஆதரவை கொடுங்கள். இனிமேல் நான் ராஜா ராணி சீரியல் இல்லை, அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று சொல்லி வீடியோவை வெளியிட்டு இருந்தார். நன்றாக நடித்து வந்த நிலையில் நீங்கள் விலகியது சரியில்லை என்று இதற்கு பலரும் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து இருந்தனர்.


இந்த நிலையில் புது சந்தியாவாக யார் நடிப்பார் என்ற கேள்வி ராஜா ராணி ரசிகர்களிடையே எழுந்தது. தற்போது அது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்ற நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா புதிய சந்தியாவாஐ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முதலில் சந்தியாக நடித்த ஆலியா மானசா திருப்பி வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் வராமல் ஜீ தமிழ் நடிகை ஒருவர் நடிக்க இருப்பது ராஜா ராணி ரசிகர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கதை இல்லை என்றால் முடித்து விடுங்கள், ஒரு நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தை எத்தனை முறை தான் மாற்றுவீர்கள் என்று ரசிகர்கள் கண்டன குரல்களும் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் புது சந்தியாவை அறிமுகப்படுத்தி புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்