உதவி கேட்டு வந்த சரவணனை அசிங்கப்படுத்தி அனுப்பிய சந்தியா.! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க.!

வெளியிட்டது

ராஜா ராணி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் ராஜா ராணி சீசன் 2. இது முதல் சீசன் கொடுத்த வெற்றியால் தற்போது இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கதையின் கதாநாயகியாக இருக்கும் சந்தியா சூழ்நிலை காரணமாக இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார். சரவணனின் தாயார் சிவகாமி மிகவும் கண்டிப்பானவர். அவர் தனது குடும்பம், குடும்பத்தின் கௌரவம் என வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நபராக இருக்கிறார். இதில் சந்தியாவிற்கு எப்படியாவது படித்து ஐபிஎஸ் ஆகி விடவேண்டும் என்கிற கனவு இருக்கிறது. தனது கனவை மறைத்து மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் கணவர் சரவணனுக்கு சந்தியாவின் கனவுகள் தெரிய வர அவரை ஐபிஎஸ் ஆக்குவதற்கு பல தடைகளை கடந்து முயற்சி செய்து தற்போது ஐபிஎஸ் ஆகியிருக்கிறார். சந்தியாவும் தனது சொந்த ஊரான தென்காசிக்கே ஐபிஎஸ் ஆக வந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதவி கேட்டு வந்த சரவணனை அசிங்கப்படுத்தி அனுப்பிய சந்தியா.! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க.! 1
கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த சீரியல் இருந்து அடுத்தடுத்த விலகல்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. முதலில் சந்தியாவாக நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் விலகினார். தற்போது அவர் சன் டிவிக்கு சென்று விட்டார். இரண்டாவதாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா விலகினார். தற்போது இரண்டாவது சந்தியாவாக நடித்து கொண்டிருந்த ரியா விஸ்வநாதனும் சீரியலை விட்டு விலகி இருந்தார். அதற்காக அவர் கூறிய காரணமாவது தனக்கு மிகவும் டார்ச்சர் கொடுக்கப்பட்டதாகவும், இவர்கள் செய்த டார்ச்சரால் தனக்கு இரவில் படுத்தால் தூக்கம் கூட வருவதில்லை என்றும், லீவு கூட கொடுக்காமல் வேலை வாங்கியதால் நாடகத்தில் இருந்து விலகி விட்டதாக விளக்கம் அளித்திருந்தார். அடுத்த விலகலாக இயக்குனர் பிரவீன் பென்னட்டும் சீரியலில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்கிற நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் சிவகாமியின் கடைசி மருமகள் ஜெனி லைசென்ஸ் இல்லாமல் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதை சோதனை செய்த அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாத காரணத்தினால் அந்த கடையை பூட்டி சீல் வைத்துவிட்டனர். இதனால் சிவகாமி சந்தியாவிடம் உதவி கேட்கலாம் என்று கூறுகிறார். சரவணனும் சந்தியாவிடம் உதவி கேட்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நான் பதவி ஏற்கும் போதே சொந்தக்காரங்களுக்கு உதவி செய்ய பதவியை பயன்படுத்த மாட்டேன் என்று அனுப்பிவிடுகிறார். நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்