ராஜா ராணி 2 ஷூட்டிங்கில் அர்ச்சனாவுக்கு நடந்த வளைகாப்பு.! வெளியானது வீடியோ.!

வெளியிட்டது

ராஜா ராணி 2 சீரியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடைபெற உள்ளது. வரும் வாரங்களில் அர்ச்சனாவின் வளைகாப்பு எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன. அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜா ராணி 2 சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இது ராஜா ராணி 1 சீரியல் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக்கான ‘என் கணவன் என் தோழன்’ சீரியலை அப்படியே காப்பி அடித்து இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது மனைவியின் ஆசையை, ஒரு சமையல்கார கணவன் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதும், அதற்கு அவரது தாயாரே தடையாக இருப்பதும், பின்னர் இந்த தடைகளை தகர்ந்து அவர் எவ்வாறு போலீஸ் அதிகாரியாக ஆகிறார் என்பதும் குறித்த கதை தான் ராஜா ராணி 2.

ராஜா ராணி 2 ஷூட்டிங்கில் அர்ச்சனாவுக்கு நடந்த வளைகாப்பு.! வெளியானது வீடியோ.! 1

முதலில் இந்த கதையின் கதாநாயகன் சரவணானாக சித்தும், சந்தியாவாக ஆலியா மானசாவும் நடித்து வந்தனர். ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த காரணத்தினால், இந்த சீரியலை விட்டு விலக நேர்ந்தது. பின்னர் சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் நடித்து வருகிறார். முதலில் ரியாவை ஏற்றுக் கொள்ளாத மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை சந்தியாவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது பரபரப்பான கட்டங்களுடன் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்தியா போலீஸ் தேர்வு எழுதுவதற்கு அவரது மாமியார் சிவகாமி சம்மதம் சொல்லிவிட்டார். அதேநேரம் ஒரு குழந்தை பெற்றுத் தர வேண்டும் என்று ஒரு கடிவாளமும் போட்டுள்ளார். மேலும் சந்தியா தேர்வு எழுதுவது, அதில் ஜெயிப்பது, பின்பு போலீஸ் அதிகாரி ட்ரைனிங் செல்வது என்று ஏகப்பட்ட திருப்பங்கள் இந்த கதையில் காத்துக் கொண்டிருக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க சீரியலில் வில்லியாக வரும் அர்ச்சனாவின் வளைகாப்பு தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ஷீட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. வரும் வாரங்களில் இது தொடர்ச்சியாக ஒரு வாரம் கூட ஒளிபரப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனம் வளைகாப்பு நிகழ்ச்சி ஒரு வாரம் நடைபெற்ற நிலையில் அர்ச்சனாவின் வளைகாப்பு நிகழ்ச்சியும் ஒரு வாரம் தொடர் எபிசோடாக நடத்தப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதன் புகைப்படங்கள் வீடியோ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோக்களை நீங்களும் காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்