நகையை திருடுனது இவன்தான்..! ஆதியை ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடித்த சந்தியா..!

வெளியிட்டது

ராஜா ராணி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜெஸ்ஸி பியூட்டி பார்லரில் இருந்து நகைகளை திருடியது ஆதி தான் என்கிற உண்மையை ஆதாரத்துடன் போட்டு உடைத்துள்ளார் சந்தியா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இது ஏற்கனவே ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சித்துவும், சந்தியாவாக நடிகை ஆஷா கௌடாவும் நடித்து வருகின்றனர். மனைவியின் கனவை நிறைவேற்ற போராடும் கணவனாக சித்து நடித்து வருகிறார். இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனுக்கு நன்கு படித்த பெண்ணான சந்தியாவை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். அவருக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ஐபிஎஸ் ஆகியிருக்கிறார் சந்தியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நகையை திருடுனது இவன்தான்..! ஆதியை ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடித்த சந்தியா..! 1

 

தற்போது இந்த கதையிலிருந்து பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஆலியா மானசாதான் சந்தியாவாக நடித்து வந்தார். முதலில் அவர் இந்த நாடகத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். அவரும் விலகி தற்போது கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா சந்தியாவாக நடித்து வருகிறார். பின்னர் இந்த கதையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா விலகினார். பின்னர் இந்த நாடகத்தை இயக்கி வந்த பிரவீன் பென்னட்டும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது கதைப்படி சந்தியா ஐபிஎஸ் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் கதையில் அடுத்து அடுத்து திருப்பங்கள் நடந்து வருகிறது. சந்தியா கணவரின் தம்பி ஆதியின் மனைவி ஒரு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் இருக்கும் நகைகள் காணாமல் போய் விடுகிறது. அதை திருடியது ஆதிதான் என்பதை கண்டுபிடித்து விடுகிறார் சந்தியா. இன்று வீட்டிற்கு வரும் சந்தியா வீட்டில் உள்ள அனைவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஆதி மெதுவாக எழுந்து செல்ல முயற்சிக்கும் போது ஆதியிடன் தனியாக பேச வேண்டும் என்று சந்தியா கேட்கிறார். அப்போது சரவணன் என்ன நடந்தது என்று கேட்க, ஜெஸ்ஸி கடையில் இருந்து நகையை திருடியது ஆதி தான் என்கிற உண்மையை போட்டு உடைக்கிறார். அப்போது அர்ச்சனா சந்தியா ஆதாரம் இல்லாமல் இவ்வளவு தூரம் பேச மாட்டார் என்று சொல்ல, என்ன ஆதாரம் இருக்கிறது உங்களிடம் என்று ஆதி கேட்கிறார். அப்போது மொபைல் போனில் இருந்த சிசிடிவி ஆதாரத்தை காட்டுகிறார் சந்தியா. அதை பார்த்த பின்பு அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் சிவகாமி. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்