வசமா மாட்டுனியா? ஆதியின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளும் ஒட்டுமொத்த குடும்பம்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. ராஜா ராணி 1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இது தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் நடந்து வருகிறது. இந்த தொடரானது ஹிந்தியில் ஒளிபரப்பாகி தமிழில் ரீமேக் செய்யப்பட்ட என் கணவன் என் தோழன் நாடகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இதன் கதை போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் மருமகளுக்கு மாமியார் தடையாக இருக்கிறார். ஆனால் தனது மனைவியை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்கிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார் கணவர். தனது தாயின் எதிர்ப்பையும் மீறி தனது மனைவியை கணவன் சரவணன் போலீஸ் அதிகாரி ஆக்குகிறாரா? இல்லையா? என்பதுதான் இந்த நாடகத்தின் கதை. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வசமா மாட்டுனியா? ஆதியின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளும் ஒட்டுமொத்த குடும்பம் 1

இந்த நாடகத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தும், சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா விஸ்வநாதனும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் சந்தியாவாக நடிகை ஆல்யா மானசா நடித்து வந்தார். பின்னர் அவர் இரண்டாவது பிரசவத்திற்காக நாடகத்தை விட்டு விலக நேர்ந்தது. மேலும் இந்த நாடகத்தில் பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த நாடகத்தில் அர்ச்சனாவிற்கு வளைகாப்பு நடப்பது காட்டப்படுகிறது. சரவணன் தம்பி ஆதியும், ஜெஸ்ஸியும் காதலித்து வந்தனர். நெருங்கி பழகியதால் ஜெஸ்ஸி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் கதையின் திருப்பமாக அர்ச்சனா வளைகாப்பிற்கு மேக்கப் போட வருகிறார் ஜெஸ்ஸி. அங்கு ஜெஸ்ஸி மயங்கி விழ அவர் கர்ப்பத்திற்கு காரணம் ஆதி தான் என்று அனைவரும் முன்பும் போட்டு உடைத்து விடுகிறார்.

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஆதிக்கு வேறு திருமணம் செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அங்கு பெண் பார்க்க செல்லும் ஆதியிடம் அந்த பெண் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செல்கிறார். ஆனால் உள்ளே அழைத்துச் சென்றபோது அங்கு ஜெசி இருக்கிறார். ஜெசியிடம் நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவசரப்பட்டு கூறவில்லை என்றால், நான் என் அம்மாவிடம் பேசி இந்த காரியத்தை சுலபமாக முடித்து இருப்பேன் என்று ஆதி கூறுகிறார். இதை வெளியில் இருந்து ஒட்டுமொத்த குடும்பமே கேட்டு விடுகிறது. இந்த அதிரடி திருப்பங்களுடன் கூடிய ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்