பெயரைத் தூக்க நாலு பேர், பட்டத்தை பறிக்க 100 பேர்.! தளபதியை மறைமுகமாக தாக்கினாரா சூப்பர் ஸ்டார்?

வெளியிட்டது

தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்கிற சர்ச்சை தற்போது எழுந்திருக்கும் நிலையில், அது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படத்தின் பாடல் மூலமாக பதில் அளித்து இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வர தொடங்கியிருக்கிறது. சமீப காலமாக தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் உயிருடன் இருக்கும் போதே இது போன்ற பேசுவது முறையல்ல என்று சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொந்தளித்து போயிருந்தனர். வாரிசு படத்தின் விழா ஒன்றில் பேசிய நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் நம்முடைய விஜய் தான் என்று பேசி இருந்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. சரத்குமாரின் அலுவலகத்தை ரஜினிகாந்தின் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். மேலும் ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும் பொழுதே எப்படி இவ்வாறு பேசலாம் என்றும் சண்டை கிளம்பியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெயரைத் தூக்க நாலு பேர், பட்டத்தை பறிக்க 100 பேர்.! தளபதியை மறைமுகமாக தாக்கினாரா சூப்பர் ஸ்டார்? 1

பின்னர் இந்த சண்டைகள் அனைத்தும் ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை கிளம்பி இருக்கிறது. நேற்று ஜெயிலர் படத்திலிருந்து இரண்டாவது சிங்கள் பாடலான ஹூகும் என்கிற பாடல் வெளியாகி இருந்தது. இந்தப் பாடலில் இருக்கும் சில வரிகள் நடிகர் விஜய் குறித்து தான் என்று ரஜினி ரசிகர்கள் தற்போது இணையத்தில் கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது விஜய் ரசிகர்களும் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 169 வது படமான ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. முதல் பாடலான காவலா பாடல் தற்போது இணையத்தை கலக்கி வரும் ட்ரெண்டிங் பாடலாக இருந்து வருகிறது. அதேபோல நேற்று ஹூகும் என்கிற பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.


அந்த லிரிக்ஸில், பெயரைத் தூக்க நாலு பேர், பட்டத்தை பறிக்க 100 பேர், உன் அலும்பை பார்த்தவன், ங்கொப்பன் விசிலை கேட்டவன், உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன், குட்டி சுவத்தை எட்டிப் பார்த்தா உசுர கொடுக்க 100 பேரு என்ற வரிகள் இடம் பெற்றிருந்தது. இந்த வரிகளை பார்த்த ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இந்த இது போன்ற வரிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று பலர் சொல்லும் பொழுது விஜய் அதை மறுத்து பேசாமல் மௌனம் காத்து வருகிறார், எனவே கடுப்பில் இருக்கும் ரஜினியை இதுபோல தன் பாட்டின் மூலமாக பதிலடி கொடுத்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு விஜய் ரசிகர்களும் ஒரு காலத்துல சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்ன்னு சொல்லிட்டு, இப்போ நான்தான் சூப்பர் ஸ்டார் என்று நம்ப வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். Watch the Below Video.! 

YouTube Video Embed Code Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்