Categories: அரசியல்

1996ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த ரஜினி Viral Video

வெளியிட்டது

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் ரஜினிகாந்த் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது ஜெயலலிதா பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் ஜெயலலிதா இவ்வளவு நடந்த பிறகும் மாறவே இல்லை, அவர் கடைசி வரை மாற போவதே இல்லை என்றும் கூறுகிறார். மேலும் அவருக்கு இவ்வளவு நாள் பண வெறி இருந்தது இப்போது பழி வாங்கும் வெறி வந்துவிட்டது என்று கூறுகிறார். வைரலாகி வரும் அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

1996ம் ஆண்டு திமுக கூட்டணியை ஆதரித்து ரஜினி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் ஜெயலலிதா அவர்களை கடுமையாக எதிர்த்து பேசி வந்தார். ஜெ ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட இந்த கட்சியைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறி இருந்தார். இதனால் 1996 தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏன் ஜெயலலிதா கூட போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் படு தோல்வியை தழுவினார். அந்த கோபம் ரஜினி மீது ஜெயலலிதாவிற்கு இருந்து கொண்டே இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியானது.

1996ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த ரஜினி Viral Video 1

ரஜினிகாந்த் அரசியல் பேச்சுக்கள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தமிழகத்தின் இரு பெரும் ஜாம்பவன்களாக இருந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் திரு.கருணாநிதி மற்றும் செல்வி. ஜெயலலிதா இருவரும் மறைந்த பின்பு அந்த இடம் வெற்றிடமாக இருப்பதாக கூறி தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது திருமண மண்டபமான ராகேவந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். பிறகு கொரோனா பரவலை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்