100 கோடி என்ற வசூல் என்ற கனவை நினைவாக்கி காட்டிய படம் நடிகர் ரஜினியின் “சிவாஜி” திரைப்படம். ரஜினி, ஏ.வி.எம், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 2007ஆம் வெளியான இந்த படம், தமிழில் முதல் 100 கோடி எடுத்த படமாக சாதனையை புரிந்தது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினி இருவருமே முதல் முறை கூட்டணி அமைத்த இந்த படம், ஷங்கரின் எல்லா படங்களை போலவும் அரசியலையும், ஊழலையும் மையப்படுத்தியே வெளியானது. ஆடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியலை நீண்ட காலமாக பேசிக்கொண்டிருந்த ரஜினி இந்த படத்தில் கொஞ்சம் ஒரு படி மேலே போய் இன்னும் குறிப்பாக ஊழல், லஞ்சத்தால் ஒருவர் படும் கஷ்டத்தை இளம் கொஞ்சம் வெளிப்படியாக பேசியதும் படத்தின் இந்த மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. நடிகை ஷ்ரேயாவின் கிளாமர், விவேக்கின் காமெடி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என அனைத்துமே தனித்துவமாக அமைந்து, ஷங்கரின் பிரமிக்க வைக்கும் கதைக்களமும், கதையோட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அப்போது வரை அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்தது மட்டுமின்றி தேசிய விருதை சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்ற பிரிவின் கீழ் வாங்கியது. தமிழ்நாடு அளவில் ஃபிலிம் ஃபேர் விருதுகளும் வென்றது இந்த படம். நேற்றோடு இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அவதில்லை 2007ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகி இருந்தது.
இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் நடிகர் ரஜினி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிவாஜி படம் வெளியாகி இப்பொது 15 ஆண்டுகள் ஆகிறது, இந்த நேரத்தில் நான் ஏ.வி.எம் நிறுவனத்திற்கும், படத்தை சிறப்பாக எடுத்த இயக்குனர் ஷங்கருக்கு, நன்றாக நடித்துள்ள படத்தின் ஆர்ட்டிஸ்ட் அனைவர்க்கும், மற்ற முக்கிய டேசனிசியன் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறி வெளியிட்டுள்ளார்.
இதன் பின் நடிகர் ரஜினியும், ஷங்கரும் அடுத்தடுத்து 2 மெகா ஹிட் படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார். எந்திரன் மற்றும் 2.0 என இரண்டு படங்களுமே இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 2.0 படம் 850 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலை 6ஆம் இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது.
Video Courtesy- Kokarako