செருப்பு போட முடியாமல் சிரமப்பட்ட ரஜினி.. உதவி செய்ய வந்தவரிடம் ரஜினி காட்டிய பெருந்தன்மை..இதனால் தான் நீங்க சூப்பர்ஸ்டார்

வெளியிட்டது

அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரைத்துறையில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தும் தனது ரசிகர்களுக்காக நடித்து அவர்களை மகிழ்வித்து கொண்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்! அத்தனை புகழ் பெற்றவர் தான் ரஜினிகாந்த்! கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக வாழ்க்கையத் தொடங்கி இன்று இந்திய திரை உலகில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார்.
திரைத்துறையில் வெற்றி படங்களை வரிசையாக கொடுத்து வந்தால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீடியோ கீழே உள்ளது.

செருப்பு போட முடியாமல் சிரமப்பட்ட ரஜினி.. உதவி செய்ய வந்தவரிடம் ரஜினி காட்டிய பெருந்தன்மை..இதனால் தான் நீங்க சூப்பர்ஸ்டார் 1

இன்று 70 வயதைக் கடந்துவிட்டப் பிறகும் கூட கலையின் மீது உள்ள ஆர்வத்தால் இன்று வரை நடித்துக் கொண்டே இருக்கிறார். 1975ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அன்று தொடங்கி இன்றுவரை 168 படங்கள் நடித்து முடித்துள்ளார். அவரது 169வது படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். கடைசியாக சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான படம் அண்ணாத்த. தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் நடித்து சாதனை புரிந்துள்ளார். எவ்வளவு உயரம் சென்றாலும் இன்னும் அந்த எளிமையைக் கடைபிடித்து வருகிறார்.

அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மீனாவின் கணவர் காலமானர். இதற்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்த வந்தார் ரஜினிகாந்த். அஞ்சலி செலுத்துவிட்டு வெளியே செல்லும் போது தனது காலணியை மாட்ட சிரமப்பட்டார். அப்போது அருகில் இருந்தவர் அவருக்கு காலணி அணிவித்துவிட முயற்சி செய்த போது அவரை தடுத்து மேலே தூக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அந்த பண்பை மாற்றாமல் அப்படியே இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்