ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியே இருக்கிறார். தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 1975 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமார் 168 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். திரை உலகை 50 ஆண்டுகளாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு நேற்று 73 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு திரை பிரபலங்கள் தொடங்கி, அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் அவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் மகன்களான லிங்கா மட்டும் யாத்ராவுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ஐஸ்வர்யாவும் தனுஷும் 13 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். அவர்களுக்கு சமாதானம் பேசியதும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. விரைவில் இருவரும் இணைவார்கள் என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அதற்கான எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஐஸ்வர்யாவும் தனது மகன்களுடன் ரஜினிகாந்த் வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். ஐஸ்வர்யா தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் அவ்வப்போது சென்று தனது தந்தை தனுசை பார்த்துவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஐஸ்வர்யா ஒரு அழகிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். சூட்டிங் முடிந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிக்கு அவரது பேரன்கள் வாழ்த்துக்களை கூறி அவரை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்திருக்கின்றனர். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த அவர் இதைவிட அழகான புகைப்படம் ஒன்றை எடுக்க முடியாது அப்படிப்பட்ட சில உறவுகளுக்கு தலைப்பும் இடம் முடியாது என்னுடைய மகன்களுடன் பிறந்தநாள் பையன் இருக்கிறார். தாத்தாவின் அன்பு என்று ஐஸ்வர்யா பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.!