சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் டப்பிங் பணிகளை அவர் இன்று நிறைவு செய்துள்ளார். அந்த வீடியோவை தற்போது சௌந்தர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே மூணு படத்தை இயக்கியதன் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின்னர் சில டாக்குமென்டரி படங்களை இயக்கி இருந்த அவர், தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் மியூசிக் அமைக்க கபில்தேவ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை பிரவீன் பாஸ்கரும் ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமியும் கவனித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்காக அடிக்கடி திருவண்ணாமலைக்கு சென்று வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மேலும் படம் நன்றாக வரவேண்டி திருவண்ணாமலையில் அடிக்கடி பூஜைகளும் செய்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகளும் சில தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டப்பிங் பணிகளுக்காக ரஜினிகாந்த் இன்று தியேட்டருக்கு வந்திருக்கும் வீடியோவை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Embed Code Credits: Lyca Productions