Categories: அரசியல்

மக்கள் நீதி மய்யத்தில் ரஜினியா? வாய்புகள் இல்லை கமல் திட்டவட்டம்!!

வெளியிட்டது
மக்கள் நீதி மய்யத்தில் ரஜினியா? வாய்புகள் இல்லை கமல் திட்டவட்டம்!! 1

மக்களின் நலன் கருதி, தேவைப்பட்டால் நானும், ரஜினியும் அரசியலில் இணைந்து செயல்படுவோமே தவிர்த்து , அவர் ஒருபோதும், மக்கள் நீதி மய்யத்தில் இணையமாட்டார் என்று அக்கட்சியின் தலைவர்
கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு , மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடந்தது முன்னதாக, கமல்ஹாசன் செய்தியாளரை சந்தித்து அவர் பேசுகையில்:
எனக்கும், ரஜினிக்கும் இடையேயான நட்பைவிட, தமிழகத்தின் நலன் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதான் அரசியலில் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தேவைப்பட்டால் இருவரும் சரியான நேரத்தில் கரம்கோர்த்து களமிறங்குவோம். இதுகுறித்து விரிவாக ஆலோசித்து வரு‌கிறோ‌ம் என்றார்.

அதே நேரத்தில், ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யத்தில் இணைவாரா என்ற கேள்வியே தவறானது. ஒருபோதும் அவர் எங்கள் கட்சியில் இணையமாட்டார் என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.முன்னதாக, ஒடிசா சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பிய கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக அரசியலில் தேவைப்பட்டால் நானும், ரஜினிகாந்தும் இணைந்து செயல்படுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்