Categories: சினிமா

விஞ்ஞானத்தை வச்சி ஒரு துளி ர த் த ம் உருவாக்க முடியுமா? அதிரடியாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

வெளியிட்டது

இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு ரஜினிகாந்த் அவர்கள் விஞ்ஞானிகளால் ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா? கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசி இருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் படத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வரும் அவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த ஒரு விழாவில் பேசிய திரு ரஜினிகாந்த் அவர்கள் விஞ்ஞானம் குறித்தும் ஆன்மீகம் குறித்தும் பேசினார். மேலும் கடவுள் மறுப்பாளர்கள் குறித்தும் அவர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானத்தை வச்சி ஒரு துளி ர த் த ம் உருவாக்க முடியுமா? அதிரடியாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! 1

விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்ற போதிலும் நம்மால் ஒரு துளி ரத்தத்தை தயாரிக்க முடியுமா இதெல்லாம் தெரிந்து இருந்தும் சிலர் கடவுள் மறுப்பு குறித்து பேசுகிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது எல்லாம் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை என்று சூப்பர் ஸ்டார் பேசினார். மேலும் தன்னால் அரசியலுக்கு வராதது குறித்த கருத்து தெரிவித்த அவர், அப்போது அரசியலுக்கு வந்த பொழுது கொரோனா இருந்த காரணத்தினால் தன்னால் அரசியலுக்கு வர முடியவில்லை என்றும் என்னுடைய உடல் நிலையை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் பேசினார். மேலும் எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும், மனது நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பேசினார்் அரசியலுக்கு வராமல் போனதற்கு தன்னுடைய உடல்நலம் மட்டுமே காரணம் வேறு எந்த காரணமும் இல்லை என்று பேசினார்.


அவருடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினி அரசியலுக்கு வராமலேயே பொதுமக்களுக்கு நல்லது செய்யலாம். அரசியலுக்கு ரஜினி வர வேண்டாம் நண்பர் என்கிற முறையில் நான் அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார். தனியார் அறக்கட்டளை சார்பில் உப்பை குறைத்து ஆயுளை அதிகரிப்போம் என்ற வாசகத்தை மக்களிடையே கொண்டு செல்கின்றோம் ரஜினிகாந்த் சபதம் ஏற்றுக் கொண்டார். நீங்களும் அவர் பேசிய அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Tamil Mint

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

View Comments

  • Research team in Cambridge is working for quite long on synthetic blood. Success of this project will be a great breakthrough for mankind. It is not, but the not will not be not forever.

வெளியிட்டது

புதிய செய்திகள்